கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்
22 Nov 2025, 3:59 pm

நில அளவையர்கள் காத்திருப்புப் போராட்டம்

சேலம், நவ.22- காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட வேண்டும். பணிகளை முறைப்படுத்திட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து ஐந்தாவது நாளாக தமிழகம் முழுவ தும் நில அளவையர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக சேலம் அஸ்தம்பட்டி பகுதி யில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவையர்கள் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, கோவை, தரும புரி, உதகை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளி லும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை

கோபி, நவ.22- கோபிசெட்டிபாளையம் அருகே 11 ஆம் வகுப்பு மாண வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஞான சேகரன். இவரது மனைவி சுதா. இவர்களின் மகன்களில் இரட்டையர்களான குருஅஷ்வின், குருதர்ஷன் என ஆகிய இருவரும் பொலவக்காளிபாளையம் அரசுப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இருவரும் பருவத்தேர்வு எழுதி யுள்ளனர். அதில் குருஅஷ்வின் சரியாக தேர்வு எழுதாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நன்றாக படித்து வந்த மாணவன், தேர்வை சரியாக எழுதாதமல் இருந்தது குறித்து, பெற் றோரிடம் தெரிவிப்பதாக ஆசிரியை கூறியுள்ளார். இத னையடுத்து பள்ளியில் தேர்வு முடிந்து, மாலையில் குரு அஷ்வின், குருதர்ஷன் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு வந்தபோது, தம்பியை கரட்டூரில் உள்ள தனது தந்தை யின் மெக்கானிக் கடைக்கு செல்லுமாறு கூறிவிட்டு, குரு அஷ்வின் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்த படி வழக்கம்போல தனது அம்மாவிடம் செல்போனில் பேசி விட்டு, சிறிது நேரம் கழிந்து குருதர்ஷனிடம் செல்போனில் பேசியபோது, அப்பா, அம்மா தன்னைபற்றி ஏதாவது பேசி னார்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவரது தம்பி, எது வும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு குருஅஷ்வினிடம் அவரது தந்தை பேச முயற்சித்து, அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, நீண்ட நேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அருகே உள்ள வீட்டாரிடம் தொடர்பு கொண்டு, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கேட் டுள்ளனர். அதன்பேரில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, குரு அஷ்வின் தூக்கிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவ லறிந்து விரைந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், தனது மகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்க னவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் மாற்றத்தால் பாதிப்பு

கோவை, நவ.22– ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தால் தாங்கள் பாதிப்படைவதாக, அரசு மேல்நி லைப் பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சனியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு வந்து மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கிறோம். இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் 200க்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு கணக்குப்பதிவியல் பாடம் நடத்திய ஆசிரியை சாந்தியும், வேதி யியல் பாடம் நடத்திய ஆசிரியை சத்யாவும் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர். தேர்வு நெருங்கியுள்ள நிலையில் இந்த மாற்றம் மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது. “இந்த ஆசிரியைகள் நன் றாக பாடம் நடத்துவார்கள். இப்போது திடீ ரென மாற்றிவிட்டதால் எங்களால் படிக்க முடி யவில்லை”. எனவே இரு ஆசிரியைகளையும் மீண்டும் அதே பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தங்கள் கல்வி நலன் கருதி உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

திருப்பூர், நவ.22- திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட் டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பிற துறைக ளில் பணியாற்றி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் சனியன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். இதில், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்ரி, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், திருப்பூர் உணவக உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மாவட் டத்தில் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பணிபுரியும் வெளிமா நில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை https://labour. tn.gov.in/ism என்ற வலைதளத்தில், நிறுவனங்கள், தொழி லாளர் நலத்துறை மூலமாக பதிவேற்றம் செய்ய வேண் டும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் htt ps://tnuwwb.tn.gov.in மூலமாகவோ அல்லது தொழிற்சங் கங்கள் மூலமோ அல்லது தனிநபர்களோ பதிவு செய்து அதற் கான அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண் டும். கணக்கெடுப்பு பணிக்கு அனைத்து அரசுத்துறை மற்றும் தொழில் நிறுவனங்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று என அறிவுறுத்தினார்.

பிரிட்ஜ் சரி செய்யாத நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருப்பூர், நவ.22 - திருப்பூரில் பிரிட்ஜ் பழுதானதை சரி செய்ய தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்படைத்ததை சரி செய்யா மல், அரைகுறையாக வேலை செய்து கொடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட வாடிக்கையாளர் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத் திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. திருப்பூர் அருகே கணியாம்பூண்டி பகுதியில் வசித்து வரு பவர் டாக்டர் விஷ்ணு பொன்சிங். இவரது மனைவி விக்டல் கீதா, வாலிபாளையத்தில் உள்ள ராயல் எலக்ட்ரானிக்ஸ் நிறு வனத்தில் தனது வீட்டில் இருந்த பிரிட்ஜ் பழுதானது குறித்து சரி செய்து தரும்படி கேட்டிருக்கிறார். அவர்கள் சரியாக வேலை செய்யாமல் பிரிட்ஜ் கதவு உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களையும் வெவ்வேறானதை மாற்றிக் கொடுத்துள்ள னர். இதனால் மன உளைச்சல் அடைந்த கீதா, திருப்பூர் நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது வீட்டு பிரிட்ஜ்ஜை முழுமையாக பழுது நீக்கித் தருவதுடன், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினார். இந்த வழக்கில் வாடிக்கையாளர் கீதா தரப்பில் வழக்கறி ஞர் வை.ஆனந்தன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நுகர் வோர் நீதிமன்ற நடுவர் தீபா, சரியாக பழுது நீக்கித் தராத ராயல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கீதாவுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளில் அமல்படுத்த வலியுறுத்தல்

உடுமலை, நவ.22- உடுமலை தாலுகாவில் தளி பேரூராட்சி மட்டுமே உள்ளது. ஆனால் விவசாய வேலைகளை மட்டுமே முழுமையான வாழ்வாதாரமாக இருக்கும் மடத்துக்குளம் தாலுகாவில் கொமரலிங்கம், மடத்துக்குளம், சங்கரமநல்லூர் மற்றும் கணி யூர் என நான்கு பேரூராட்சிகள் உள்ளன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொமரலிங்கம் பேரூராட்சி யில் மட்டுமே நூறு நாள் திட்டம் நடைமுறை படுத்தப்பட் டது. ஆனால் விவசாய வேலைகளை மட்டுமே நம்பி இருக் கும் மடத்துக்குளம், கணியூர், சங்கரமநல்லூர் பேரூராட்சியில் திட்டம் நடைமுறை படுத்தாத காரணத்தினால் பொது மக்கள் மிகவும் பாதிக்கபடுகின்றனர். இது குறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் மாசணம் தெரிவிக் கையில், மடத்துக்குளம் தாலுகா முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். எனவே மக்களின் நலனை கருத் தில் கொண்டு மீதம் உள்ள நான்கு பேரூராட்சியிலும் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கொமரலிங்கம் பேரூராட்சியில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண் டும் என்றார்.

திமுக பிரமுகர் சுட்டுக்கொலை: 2 பேர் கைது

திமுக பிரமுகர் சுட்டுக்கொலை: 2 பேர் கைது சேலம், நவ.22- வாழப்பாடி அருகே கருமந்துறை பகுதியில் திமுக பிரமு கரை முன் விரோதம் காரணமாக சுட்டுக்கொன்ற வழக்கில், சந் தேகத்தின் பேரில் இருவரை போலீசார் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கல்வராயன் மலை கிராங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சரிதா மற்றும் மூன்று மகளுடன் விவசாயம் செய்து வந்தார். மேலும் திமுகவில் அப்பகுதியின் கிளை செயலாள ராக உள்ளார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவின ரான ராஜமாணிக்கம் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுக ளாக நிலத்தகராறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகராறின் காரணமாக ராஜேந்திரன், ராஜமாணிக்கத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து வெள்ளியன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி சரிதா இரு வரும் அவரது விவசாயத் தோட்டத்திற்கு செல்வதற்காக சென்றபோது அவர்களை ராஜமாணிக்கம், பழனி ஆகியோர் இருவரையும் பின் தொடர்ந்து சென்று ராஜேந்திரனை, தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மனைவி சரிதா கூச்சலிட்டத்தில் அக்கம் பக்கத்தினர் கரிய கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில், விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை மீட்டு உடல் கூறுராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமந்துறை போலீசார் ராஜமாணிக்கம் மற்றும் பழனியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய மண்ணியல் சங்க ஆண்டு விழா

இந்திய மண்ணியல் சங்க ஆண்டு விழா கோவை, நவ.22- இந்திய மண்ணியல் சங்கத்தின் 89 ஆவது ஆண்டு மாநாடு நிறைவு விழா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்திய மண்ணியல் சங்கத்தின் 89 ஆவது ஆண்டு மாநாடு வெள்ளியன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தில் உற்சாகத்துடன் நிறைவுற்றது. நாடு முழுவதிலுமிருந்து வந்த மண்ணியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இம்மாநாட்டை இந்திய மண்ணியல் சங்க மும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தின. இந்திய மண்ணியல் சங்கக் கோவைப் பிரிவுத் தலைவரும் மண்ணியல் துறைத் தலைவருமான முனைவர் து.செல்வி அமர்வுக்கு தலைமை தாங்கி மண்ணியல் விஞ்ஞானிக ளுக்கு விருதுகளை வழங்கினார். மூன்று நாள் மாநாட்டில் நடந்த விவாதங்களும் ஆய்வறிக் கைகளும் மண்ணைப் பாதுகாத்தல், உற்பத்தித் திறனை உயர்த்துதல், நிலையான விவசாய முறைகளை வளர்த் தெடுத்தல் ஆகிய திசைகளில் புதிய பாதைகளைத் திறந்து விட்டதாக பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்திய மண்ணியல் சங்க இணைச் செயலாளர் முனைவர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா நன்றி கூற, மாநாடு நிறைவுற்றது.

சேலம் - ஈரோடு மெமு ரயில் சேவை துவக்கம்

சேலம், நவ.22- சேலம் - ஈரோடு மெமு ரயிலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளதால், ரயில் சேவை நவ. 24 முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ரயில் பய ணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் - ஈரோடு இடையே மெமு ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் நவ.24 முதல் இயக் கப்படும். சேலத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மகுடஞ் சாவடி, சங்ககிரி, காவேரி வழியாக ஈரோட் டுக்கு 7.25 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, சேலத்தை 8.45 மணிக்கு அடையும். வியாழக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாள்கள் இந்த ரயில் இயக்கப்ப டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, நவ.22- லவ்டேல் பகுதியில் சாரல் மழையுடன் கடுங்குளிர் நிலவுவதால், அப்பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மித மான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி, நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள லல்டேல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனியன்று, வெயி லின் தாக்கம் குறைந்து, அடர்ந்த மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழையானது பெய்து வருகிறது. சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படு வதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளது.