கால்பந்தின் இளம் சூறாவளி - யமால்
1 hour before

கால்பந்தின் இளம் சூறாவளி - யமால்

உலகக்கால்பந்து வர லாற்றில் மெஸ்ஸி, ரொனால் டோ, பீலே, டியாகோ மரடோனா, நெய்மர் எனப் பல ஜாம்பவான்கள் தங்க ளது திறமையால் தலைமுறைகளை வசீகரித்துள்ளனர். இன்று அவர்கள் வகுத்த பாதையில் வேகமாக நடைபோடும் இளம் புயல் லாமின் யமால் நஸ்ரௌய் எபானா. வறுமையிலிருந்து விண்மீன் வரை 2007, ஜூலை 13, ஸ்பெயினின் பார்சிலோனா அருகிலுள்ள மட்டாரோ நகரின் ரொகாபொண்டா எனும் தொழி லாளர் வர்க்கம் வாழும் எளிய பகுதி யில் இந்தச் சூறாவளி காலடி வைத்தது.

தந்தை முனீர் நஸ்ரௌய் மொராக்கோ வைச் சேர்ந்தவர். தாய் ஷீலா எபானா மத்திய ஆப்பிரிக்க நாடான எக்குவடோரியல் கினியாவைச் சேர்ந்த வர். புலம் பெயர்ந்த இரு உள்ளங் களின் காதலில் பிறந்தவன் இந்த யமால். மூன்று வயதில் பெற்றோர் பிரிந்த போது, தாய் ஒரு துரித உணவகத்தில் நள்ளிரவு வரை உழைத்து மகனின் கனவுகளுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தார்.

நான்கு வயதிலேயே பந்தோடு நட்பு கொண்ட யமால், தன் வேகத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் ஆச்சரியப்படுத்தினார். அந்தத் திறமை யைக் கண்ட பார்சிலோனாவின் புகழ் பெற்ற லா மாசியா அகாடமி, வெறும் 6 வயதிலேயே அவனைத் தன் மடியில் அணைத்துக் கொண்டது. “யமால்” குடும்பப் பெயர் அல்ல; பிறப்பதற்கு முன் கடும் பொருளா தார நெருக்கடியில் கைகொடுத்த “லாமின்”, “யமால்” என்கிற இரு நண்பர்களின் பெயர்கள்.

அந்த நன்றிக்கடனையே மகனின் பெயராகப் பொறித்து வைத்தனர். இன்று, கோல் அடிக்கும் தருணத்தில் யமால் விரல்களால் காட்டும் “304” என்பது, அவர் வளர்ந்த ரொகாபொண்டாவின் அஞ்சல் குறியீடு - வேர்களை மறவாத மனத் தூய்மையின் அடையாளம். கனவுகளின் தொட்டில் மெஸ்ஸி லா மாசியாவில் இணைந்த போது வயது 12; யமாலோ அதைவிட 6 ஆண்டுகள் முன்னதாகவே அந்த வாசலைக் கடந்தார்.

வயதில் மூத்த வீரர்களுடன் விளையாடி, ஒவ் வொரு போட்டியிலும் தன் வயதை விட வளர்ந்த ஆட்டத்தை வெளிப் படுத்தினார். சாதனைகளின் அணிவகுப்பு 2023 ஏப்ரலில், 15 வயது 9 மாதங் களில் பார்சிலோனா சீனியர் அணி யில் அறிமுகமானார் - கிளப் வர லாற்றிலேயே மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமை யுடன், அதே ஆண்டு லா லிகா வர லாற்றிலேயே மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் பதிவு செய்தார். 16 வயதிற்குள் சாம்பி யன்ஸ் லீக்கில் களமிறங்கிய மிக இளம் வீரர் ஆனார், 51-க்கும் மேற் பட்ட போட்டிகளில் விளையாடினார். கோபா டிராபியில் உலகின் சிறந்த இளம் வீரருக்கான விருதை 2024, 2025 இல் தொடர்ச்சியாக வென்றார்.

மெஸ்ஸிக்குப் பிறகு பார்சிலோ னாவின் எண் 10 ஜெர்சியை அணியும் பெருமையும் இவருக்கே. 2026 பிப்ரவரியில் வில்லாரியலுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்து, 21ஆம் நூற்றாண்டில் லா லிகாவில் ஹாட்ரிக் அடித்த மிக இளம் வீரர் என்ற சாத னையையும் படைத்தார். மெஸ்ஸி, ரொனால்டோ கூட 16 வயதில் அடை யாத சாதனைகளை இந்த இளம் சூறாவளி எளிதாகக் கடந்துவிட்டார். சாம்பியனாக மாறிய இளவரசன் 2024 யூரோ கோப்பையில், பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதியில் 16 வயதில் அடித்த அற்புதமான தூர கோல், அவரை ஒரே இரவில் உலக நட்சத்திரமாக மாற்றியது. ஸ்பெயின் சாம்பியனானதில் யமாலின் பங்கு மகத்தானது; தொடரின் “சிறந்த இளம் வீரர்” விருதும் அவனையே தேடி வந்தது.

உலகக்கோப்பை புயல் 2026 பிபா உலகக்கோப்பையில் யமால் இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தாலும், தொடர் முழுவதும் அதிக வாய்ப்புகளை உருவாக்கிய வீரர்களின் பட்டியலில் 17 வாய்ப்பு களுடன் முதலிடத்தில் நிற்கிறார். குழு நிலைப் போட்டியில் சவூதி அரே பியாவுக்கு எதிராக அடித்த கோலின் மூலம், 1958-க்குப் பிறகு உல கக்கோப்பையில் ஆரம்பக் கோல் அடித்த மிக இளம் வீரர் என பீலே வுக்குப் பிறகு அந்தப் பெருமையையும் பெற்றார்.

பெல்ஜியத்திற்கு எதிரான காலிறுதியில் கோல் அடிக்காவிட்டா லும் சிறந்த வீரர் விருதைப் பெற்றார். வேர்களை மறவாத மனிதம் புகழின் உச்சத்தில் நின்றாலும் யமால் தன் அடித்தளத்தை மறந்த தில்லை. முதல் வருமானத்திலேயே தாய், தந்தை, பாட்டி மூவருக்கும் தனித்தனி வீடுகள் வாங்கிக் கொடுத் தார்.

தன் கால்பந்து காலணிகளில் மொராக்கோ, எக்குவடோரியல் கினியா கொடிகளைப் பொறித்து, பெற்றோரின் பூர்வீகங்களைக் கொண்டாடுகிறார். வறுமை, புலம்பெயர்ந்தோர் வாழ்வின் நிச்சயமின்மை - இவை அனைத்தையும் தாண்டி, திறமை யாலும் உழைப்பாலும் இன்று உலகக் கால்பந்தின் இதயத் துடிப்பாக மாறி யிருக்கிறார் இந்த இளம் சூறாவளி. -சி.ஸ்ரீராமுலு