தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைத்துச் செழித்த மண்ணில் நில உரிமைக்கான போராட்டம்! லட்சுமிபுரம் விவசாயிகளின் வரலாற்றுச் சுவடுகளும் நியாயமான கோரிக்கைகளும் - ப. துளசி நாராயணன்

22 Sept 2026, 9:47 pm
உழைத்துச் செழித்த மண்ணில் நில உரிமைக்கான போராட்டம்! லட்சுமிபுரம் விவசாயிகளின் வரலாற்றுச் சுவடுகளும் நியாயமான கோரிக்கைகளும் - ப. துளசி நாராயணன்

உழைத்துச் செழித்த மண்ணில் நில உரிமைக்கான போராட்டம்! லட்சுமிபுரம் விவசாயிகளின் வரலாற்றுச் சுவடுகளும் நியாயமான கோரிக்கைகளும் - ப. துளசி நாராயணன்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், வெலக்கல்நத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள லட்சுமிபுரம் கிராமம் வெறும் புவியியல் எல்லை மட்டுமல்ல; அது ஒடுக்கப்பட்ட மக்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் உருவான வரலாற்றுச் சாட்சியாகும். திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த லட்சுமிபுரம், பல பத்தாண்டு கால உழைப்பின் சின்னமாகும்.

1942ஆம் ஆண்டில், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலவிய கடும் உணவுப் பஞ்சத்தைப் போக்கவும் உணவு உற்பத்தியைப் பெருக்கவும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி,‘தி வெலக்கல்நத்தம் கூட்டுறவு விவசாய காலனித்துவ சங்கம் எண் சி 1390’ என்ற பெயரில் ஒரு கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த 32 குறவர் பழங்குடியின மக்களையும், தலித் மற்றும் அருந்ததியின மக்களையும் ஒன்றிணைத்து, குடும்பத்திற்குத் தலா 5 ஏக்கர் வீதம் மலைப்பகுதிநிலம் வழங்கப்பட்டு விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாறைகளும் புதர்களுமாக மண்டிக்கிடந்த மலையை, இந்த எளிய மக்களின் உழைப்புப் பண்படுத்தியது. ராட்சதப் பாறைகளை உடைத்து, நிலத்தைச் சமன் செய்து விவசாய நிலங்களாக மாற்றினர். நிலமற்ற பாட்டாளிகளின் கூட்டு உழைப்பால் ‘லட்சுமிபுரம்’ என்ற அழகான கிராமம் உருவெடுத்தது.

சமூக நீதியும் நில மறுபங்கீடும்

அதைத் தொடர்ந்து, 1963இல் கள்ளுக்கடை களை மூடிய காமராஜர் தலைமையிலான அரசு, அத்தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரமிழந்த 21 பிற்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் அதே கிராமத்தில் குடும்பத்திற்குத் தலா 5 ஏக்கர் நிலம் வழங்கி விவசாயத்தில் ஈடுபட வைத்தது. இத்துடன் நிற்காமல், கிராமக் கூட்டமைப்பை உருவாக்க 5 ஏக்கர் நிலமும், அம்மக்களின் கால்நடைகளின் மேய்ச்சல் தேவைக்காகத் தனியாக 5 ஏக்கர் நிலமும் துல்லியமான திட்டமிடலுடன் ஒதுக்கப்பட்டது. தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இணைந்து கூட்டுறவோடும் சமூக ஒற்றுமையோடும் வாழும் ஒரு முன்மாதிரி உழைக்கும் வர்க்கக் கிராமமாக லட்சுமிபுரம் பரிணமித்தது.

அரசுத் திட்டங்களும் மக்கள் உழைப்பின் சாதனைகளும்

1986இல் அன்றைய இந்தியப் பிரதமர் இக்கடைக்கோடி கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து, ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 26 வீடுகளைக் கட்டித் தந்து தென்னங்கன்றுகளையும் நட்டார். அதனைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களின் முயற்சியாலும் தொடர் கோரிக்கைகளாலும் 45 இலவச விவசாய மின் இணைப்புகளும், 242 வீட்டு மின் இணைப்புகளும் பெறப்பட்டன. அரசுப் பள்ளிக்கூடமும் கட்டப்பட்டு, மயான வசதி, சாலை வசதிகள், ஆழ்துளைக் கிணறுகள், குடிநீர்க் கோபுரங்கள் என உள்கட்டமைப்புகள் படிப்படியாக அமைக்கப்பட்டன.

வளர்ந்த கிராமத்து சமூகம்

அன்று 53 குடும்பங்கள் 265 ஏக்கர் நிலத்தில் விதைத்த உழைப்பு, இன்று அவர்களின் 200-க்கும் மேற்பட்ட வாரிசு குடும்பங்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.நெல், நிலக்கடலை (மணிலா), கீரை, தர்ப்பூசணி, வெள்ளரி, தென்னை, வாழை, கொத்தமல்லி எனப் பலவகைபயிர்களைப் பயிரிட்டு, நாட்டின் உணவுப் தேவையை நிறைவு செய்வதில் இவர்கள் இன்றும்முக்கியப் பங்காற்றி வருகின்றனர். தற்போது இந்தநிலங்கள் அனைத்தும் அரசு கணினியில் பட்டா எண்: 305 எனப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அரசுகளின் புறக்கணிப்பும் தற்போதைய அவலமும்

எந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டதோ, அந்தக் கூட்டுறவுச் சங்கம் 1990களில் அரசு நிர்வாகத்தால் கலைக்கப்பட்டது. அங்குதான் இந்த உழைக்கும் மக்களின் துயரம் தொடங்கியது. கூட்டுறவுச் சங்கம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு, பல பத்தாண்டுகளாக அந்த நிலத்தை உழுது வரும்விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டிய எந்தவொரு வேளாண் திட்டங்களோ, நிவாரணங்களோ, மானியச் சலுகைகளோ, வங்கி உழவர் கடன்களோ கிடைக்காத அவல நிலை நீடிக்கிறது. பாறையைஉடைத்து நந்தவனமாக்கிய உழைப்பாளிகளின் வாரிசுகள், இன்று தம் சொந்த மண்ணிலேயே சட்டப்பூர்வ நில உரிமையின்றித் தவிக்கும் நிலை,வர்க்க ரீதியான புறக்கணிப்பையே காட்டுகிறது.

நிலம் எங்கள் உரிமை!

நாங்கள் புதிதாக எந்தச் சொத்தையும், எந்த நிலத்தையும் அரசிடம் இலவசமாகக் கோரவில்லை. “இது எங்கள் பாட்டன்களும் முப்பாட்டன்களும் உழுத மண்! எங்கள் உழைப்பும் வியர்வையும் சிந்தி, பாறைகளை உடைத்து, கிணறுகளை வெட்டி உருவாக்கப்பட்ட நந்தவனம்! இந்த மண்ணுக்கான சட்டப்பூர்வ உரிமையான ‘பட்டா’வை மட்டுமே நாங்கள் கோருகிறோம்! உழைக்கும் மக்களின் நியாயமான நில உரிமையை வென்றெடுக்கவும், அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செங்கொடிப்பதாகையின் கீழ் உழைக்கும் மக்கள் அனைவரும் நாட்றம்பள்ளி லட்சுமிபுரத்தில் ஒன்றிணைகிறோம்.

நில உரிமை என்பது எமது வாழ்வுரிமை! உழைக்கும் வர்க்கத்தின் நில உரிமையை மீட்டெடுக்கும் வரை எமது போராட்டம் தொடரும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.