சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் வெளியீடு
10 Jul 2026, 7:05 pm
<p><strong>சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் வெளியீடு</strong></p><p>மதுரை, ஜூலை 10- சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்க்கை வரலாறு, தியாகம் மற்றும் நிர்வாகப் பணிகளைப் பதிவு செய்த “சுவடுகளைத் தேடி” நினைவு மீட்பு ஆவணப்பட வெளியீட்டு விழா மதுரையில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மதுரா கல்லூரி வளாகத்தில் கே.கே.வி. மீடியா வென்ச்சர்ஸ் எல்.எல்.பி. மற்றும் மதுரா கல்லூரி ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து, ஆவணப்படத்தை வெளியிட்டு உரையாற்றினார்.பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையா சிறப்புரையாற்றினார். ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி முனைவர் எம்.எஸ். சண்முகம், முன்னிலை வகித்தார். நா. சக்திகுமார் வரவேற்றார். இந்த ஆவணப்படத்தை கே.கே.வி. மீடியா வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் ஆ. ஜான் தன்ராஜ் இயக்கியுள்ளார். விழாவில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.</p>
