லட்சத்தீவு : முக்கியப் படிப்புகளை நீக்கிய மோடி அரசு
9 Jul 2026, 9:05 pm
<p><strong>லட்சத்தீவு : முக்கியப் படிப்புகளை நீக்கிய மோடி அரசு</strong> </p><p>மோடி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவர்கள் அதிக மாகப் படிக்கும் அரசியல் அறிவியல், ஆங்கிலம், சாப்ட்வேர் மற்றும் டூரிசம் (சுற்றுலா) போன்ற முக்கியப் படிப்புக ளை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக் கான கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரே ஒரு நாளுக்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் லட்சத்தீவு மாணவர்கள் தங்களின் உயர்கல்விக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மோடி அரசின் இந்த திடீர் மற்றும் இரக்கமற்ற முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p>
