மேற்கு வங்கம் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!
24 Mar 2026, 3:23 pm
<p><strong>மேற்கு வங்கம் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!</strong></p>
<p>மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) என்ற நடைமுறையினால் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் தீர்வு - ஆனால்? சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த புகார் களில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாக மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை மாலை வரை 29 லட்சம் பேரின் பெயர்கள் தொடர்பான புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 31 லட்சம் புகார்கள் நிலுவை யில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த 29 லட்சம் புகார்களில் எத்த னை பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ளன, எத்தனை பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த வெளிப்படைத்தன்மையற்ற நட வடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 60 லட்சம் பெயர்கள் நிலுவை கடந்த பிப்ரவரி 28 அன்று வெளியிடப் பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 6.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அதே வேளையில் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு (Under adjudication) விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரிக்கப் பட்டவர்களில் 1.3 கோடி பேர் ‘தர்க்கரீதி யான முரண்பாடு’ (logical discrepancy) என்ற பிரிவிலும், 32 லட்சம் பேர் ‘இருப்பி டத்தைக் கண்டறிய முடியாதவர்கள்’ (unmapped) என்ற பிரிவிலும் வகைப் படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநி லங்களைச் சேர்ந்த சுமார் 700 நீதிபதிகள் கடந்த மூன்று வாரங்களாக புகார்களை விசாரித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறினாலும், தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் சாமானிய மக்கள் மேல்முறையீடு செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனநாய கத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையமே, அதைக் கேள்விக்குறியாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
