28,00,000 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
27 Nov 2025, 3:11 pm

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவி ரத் திருத்தம் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்த எஸ்ஐஆர் பணியில் 78% வாக்கா ளர் படிவங்கள் டிஜிட்டல் மய மாக்கப்பட்டுள்ளன. அதாவது முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 22% பணியே மீதமுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்நிலையில், 78% எஸ்ஐஆர் பணி முடிவில் 28,00,000 (28 லட்சம்) வாக்காளர்கள் பெயர்கள், வாக்கா ளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக பிரபல இந்தி ஊடக மான “டிவி 9 பாரத்வர்ஷ் (TV9 Bharatvarsh) அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அச்செய்தி நிறுவனம் மேலும் கூறுகை யில்,“மேற்கு வங்கத்தில் இது வரை 28 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 9 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் காணா மல் போயுள்ளனர். அதனால் தான் அவர்களின் பெயர்கள் விலக் கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் நாங்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித் துள்ளது” என அதில் கூறப் பட்டுள்ளது. டிவி 9 பாரத்வர்ஷ் நிறு வனத்தின் செய்தி மேற்கு வங்கத் தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் 26 லட்சம் வாக்காளர்கள் நீக்க சதி?

இந்நிலையில், மேற்கு வங்கத் தில் ஏற்கெனவே 28 லட்சம் வாக்கா ளர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் சூழலில், தேர்தல் ஆணைய அதி காரி ஒருவர்,”மேற்கு வங்கத்தின் தற்போதைய வாக்காளர் பட்டிய லில் சுமார் 26 லட்சம் வாக்காளர்க ளின் பெயர்கள் 2002 வாக்காளர் பட்டியலுடன் பொருந்தவில்லை. 2002 மற்றும் 2006க்கு இடையில் எஸ்ஐஆர் செயல்முறையின் போது பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட பட்டியல்களுடன் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்த முரண்பாடு வெளிப்பட்டது” என மேலும் 26 லட்சம் வாக்காளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது போன்று, தேர்தல் ஆணைய அதிகாரி கூறியதாக செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரி 78% பணி முடிவை குறிப்பிட்டாரா? அல்லது புதிதாக தொடங்க உள்ள வாக்காளர்கள் நீக்கப் பணியை தெரிவித்தாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

பின்வாசல் வழியாக என்ஆர்சி

இதற்கிடையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “வாக்காளர்களை நீக்கியது மிகப்பெரும் சதி ஆகும். குறிப்பாக மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் மூலம், தேசிய குடிமக்கள் பதி வேட்டை (என்ஆர்சி) பின்வாசல் வழியாகச் செயல்படுத்துவ தற்கான சதி வேலையில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.