கடுங்குளிரில் தேர்தலா? லடாக்கிற்கு வஞ்சனை!
11 Nov 2026, 8:42 pm

கடுங்குளிரில் தேர்தலா? லடாக்கிற்கு வஞ்சனை!

இந்தியாவின் மணிமகுடமாகக் கருதப்படும் லடாக் பிராந்தியத்தின் மீது ஒன்றிய பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வஞ்சகமும், அதன் அரசியல் உரிமைகளைப் பறித்து வரும் எதேச்சதிகாரமும் நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு,லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட நாளிலிருந்து, அப்பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. மாநில அந்தஸ்து, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ்பாதுகாப்பு, நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து லடாக் மக்கள் கடந்தபல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும்நிலச் சுரண்டல் சக்திகளுக்கும் லடாக்கின் இயற்கை வளங்களைத் தாரைவார்க்கும் நோக்கத்தோடு, மக்களின் குரலைநரித்தனமாக ஒடுக்கி வருகிறது ஒன்றியஅரசு.

லடாக் நிர்வாகத்தின் முதன்மைச் செயலாளர் ஆஷிஷ் குந்த்ரா, டிசம்பர் 4 அன்று எட்டு மலைமேம்பாட்டுக் கவுன்சில்களின் (LAHDC) 100தொகுதிகளுக்கும், உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளார். லே மற்றும் கார்கிலில் தலா 26 தொகுதிகளாக இருந்த எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி எல்லை நிர்ணயம் செய்துள்ளதாகஅரசு கூறினாலும், கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) மற்றும்லே மக்கள் பேரவை (LAB) ஆகிய அமைப்புகளுடன் அக்டோபர் 22 அன்று பேச்சுவார்த்தையை எவ்விதக் காரணமுமின்றி ரத்து செய்துவிட்டு, இந்தத் தேர்தலைஅரசு நிர்வாகம் திணித்துள்ளது.

கடுங்குளிர்காலம் தொடங்கும் சூழலில், டிசம்பர் 15 உடன் பள்ளிகள் மூடப்படவுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் குளிர்காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு எதிராகவும், தன்னிச்சையான எல்லை நிர்ணயத்தைக் கண்டித்தும் கார்கில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டு முழு அடைப்புப் போராட்டம் வெடித்துள்ளது. மக்களின் நியாயமான அச்சங்களையும் உணர்வுகளையும் சற்றும்மதிக்காமல், “தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா” என ஒன்றிய அரசின் அதிகாரிகள் பேசுவதுலடாக் மக்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

பெண்களுக்கு 36 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விளம்பரம் செய்துகொண்டாலும், லடாக்கின் தன்னாட்சி உரிமையையும் நிலப் பாதுகாப்பையும் பறித்துவிட்டு நடத்தப்படும் இந்தத் தேர்தல் வெறும் கண் துடைப்பு நாடகமேஆகும்.

லடாக் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற ஆட்சியாளர்களின் பகற்கனவுஒருபோதும் பலிக்காது.