கல்குவாரியில் மண் சரிந்து கூலி தொழிலாளி பலி
11 Jan 2026, 2:59 pm
<p><strong>கல்குவாரியில் மண் சரிந்து கூலி தொழிலாளி பலி</strong></p>
<p>பெரம்பலுர், ஜன.11- பெரம்பலுர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல் குவாரியில் சனிக்கிழமை மாலை வெடி வைத்துபாறைகள் தகர்க்கும் பணி நடைபெற்றது. கல்குவாரி வேலை செய்யும் பணியாளரான திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா கோதூர்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்கரவர்த்தி (45), வெடிப்பதற்கு பயன்படுத்திய கம்பிகளை சுற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், சக்கரவர்த்தி மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, வருவாய் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு ராட்சத பொக்லைன் வரவழைத்து, உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டனர்.</p>
