தொழிலாளர் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி
7 Mar 2026, 2:36 pm
<p><strong>தொழிலாளர் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>பெரம்பலூர், மார்ச் 7 - ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 முதல் 10 ஆம் தேதி வரை தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தேசிய தொழிலாளர் பாது காப்பு தின விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி தேசிய தொழிலாளர் பாது காப்பு வாரத்தின் 4 ஆவது நாள் நிகழ்ச்சி யாக சனிக்கிழமை பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளிணி மற்றும் அஸ்வின்ஸ் குழும தலைவர் டாக்டர் கே.ஆர்.வி. கணே சன் ஆகியோர் கொடியசைத்து விழிப்பு ணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே தொடங்கி, காமராஜ் வளைவு – சங்கு – ரோவர் ஆர்ச் – பாலக்கரை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் நிறைவுற்றது. இந்த பேரணியில், ஹெல்மெட் அணிதல், சீட்பெல்ட் பயன்படுத்துதல், சாலை பாது காப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். இதில் 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
