வர்க்க சமரசம் பேசும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்! - ஆர். சிங்காரவேலு
19 Dec 2025, 5:32 pm
<p><strong>வர்க்க சமரசம் பேசும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்! </strong></p>
<p>விடுதலைக்குப் பின்ன ரான நமது முத லாளித்துவ சமூக அமைப்பில், முதலாளி வர்க்கத் திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தவிர்க்க இயலாதது. இன்று நாம் அனுபவிக்கும் தொழிலாளர் சட்டங்கள் யாவும் உழைக்கும் வர்க்கம் இரத்தம் சிந்தி, தியாகங்கள் புரிந்து வென்றெடுத்தவை. இத்தகைய உரிமைகளை நீர்த்துப் போக அனுமதிப்பது அடுத்த தலை முறைக்குச் செய்யும் துரோகமாகும். அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு கடந்த 11 ஆண்டுகளில் ஒரு முறை கூட ‘இந்திய தொழிலாளர் மாநாட்டை’ (ILC) மோடி அரசு கூட்டவில்லை. மாறாக, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற விவாதமே இன்றி, 29 அடிப்படை தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்பு களாக (Labour Codes) மாற்றியது. இந்தத் தொகுப்புகள் நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ளன. ‘தொழில் நடத்துவதை எளிமை யாக்குதல்’ (Ease of Doing Business) என்ற பெயரில் கார்ப்ப ரேட்டுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதையே மோடி அரசு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் போலித்தனம் ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் யோஜனா’ என்ற திட்டத்தில் 60 வயதில் ரூ. 3000 பென்ஷன் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், 40 வய தைக் கடந்தவர்களுக்கு இதில் இடமில்லை. மேலும், வருமானம் இல்லாத நிலையிலும் தொழிலா ளர்கள் பங்களிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு முரணானது. குறைந்தபட்ச ஊதியத்தைப் பொறுத்தவரை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாதம் ரூ. 26,000 வழங்கப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கோரினால், அரசு வெறும் ரூ. 176 ‘அடிமட்டக் கூலி’ எனப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. 40 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்குத் தேவை யான நிதியை ஒதுக்காமல், மௌ னம் சாதிக்கிறது ஒன்றிய அரசு. நிரந்தர வேலைக்குப் பதில் ‘கானல் நீர்’ ‘குறிப்பிட்ட கால வேலை’ (Fixed Term Employment) என்ற நடை முறை, ஒரே நிறுவனத்தில் நிரந்த ரமான வேலை என்பதைக் கானல் நீராக்கிவிட்டது. 300-க்கும் கீழ் தொழிலாளர்கள் உள்ள நிறுவ னங்கள் அரசின் அனுமதியின்றி லே-ஆப் மற்றும் ஆட்குறைப்பு செய்ய இச்சட்டத் தொகுப்புகள் அனு மதி அளிக்கின்றன. இது ‘அமர்த்து-துரத்து’ (Hire and Fire) என்ற முதலாளித்துவக் கொள்கையை நேரடியாக அமல்படுத்துவதாகும். இதனால் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்ட உரிமையைப் பறிக்கும் சதி முதலாளியும் தொழிலாளியும் ஒரே குடும்பம் என உபதேசம் செய்யும் மோடி அரசு, நடை முறையில் வேலைநிறுத்த உரிமை யைப் பறிக்க முயல்கிறது. இனி, முறைசாரா தொழிலாளர் உட்பட அனைவரும் 14 நாட்கள் முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும். பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போது வேலைநிறுத்தம் செய்தால் அது சட்டவிரோதமாக்கப் படும்; அபராதமும் சிறைத்தண்ட னையும் விதிக்கப்படும். இது தொழிலாளர்களின் குரல்வளை யை நெரிக்கும் செயலாகும். காண்ட்ராக்ட் தொழிலாளர் சட்டமும் வலுவிழக்கச் செய்யப் பட்டுள்ளது. 50-க்கும் கீழ் காண்ட்ராக்ட் தொழிலாளர் இருந்தால் உரிமம் தேவையில்லை என்ற விதி, அவர்களுக்கு இருந்த குறைந்தபட்சப் பாதுகாப்பையும் அழித்துவிடும். நமது கடமை பொதுத்துறை நிறுவனங் களைத் தனியார் வசம் தாரை வார்ப்பதும், அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிப்பதும் மோடி அரசின் ‘சுயசார்பு’ முழக்கத்தின் போலித்தனத்தைக் காட்டுகிறது. இந்தச் சட்டத் தொகுப்புகள் தொழி லாளர்களைப் பாதுகாப்பதற் கல்ல, மாறாக வர்க்க சமரசம் என்ற பெயரில் அவர்களைச் சுரண்டு வதற்கே உருவாக்கப்பட்டவை. பெங்களூரில் நடைபெற்ற சிஐடியு 17ஆவது மாநாட்டில் முடிவெடுத்தவாறு, ‘அடங்க மறு; எதிர்த்து நில்’ என்ற முழக்கத்தோடு உழைக்கும் வர்க்கம் அணிதிரள வேண்டும். டிசம்பர் 23 அன்று நடை பெறும் போராட்டத்தில் ஆயிரமா யிரம் தொழிலாளர்களை அணி திரட்டுவோம்!</p>
