தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் ஆபத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க ஒன்றிணைந்த போராட்டம் தேவை
7 Dec 2025, 3:52 pm

தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் ஆபத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க ஒன்றிணைந்த போராட்டம் தேவை

கூட்டுறவு ஊழியர் சங்க மாநாட்டில் தலைவர்கள் வலியுறுத்தல்

மதுரை, டிச. 7 - தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 16வது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை மதுரையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பல்வேறு தொழிற்ச ங்கத் தலைவர்கள், மத்தியில் அமலுக்கு வரவுள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் (Labour Codes) மற்றும் நிரந்தரப் பணிகளை அழிக்கும் நவீன தாராளமயக் கொள்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இழந்த உரிமைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என்றும் வலியுறுத்தினர். ஆபத்தில் தொழிலாளர் உரிமைகள் தென்மண்டல எல்.ஐ.சி. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பா ளர் ஆர்.எஸ். செண்பகம், “தடைகளை தகர்ப்போம் – சரித்திரம் படைப்போம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு, உரிமைகள் சட்டத்தின் வாயிலாகப் பறிக்கப்படும் இந்த முக்கியமான காலகட்டத்தில் மாநாடு நடை பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் தொகுப்புச் சட்டங்கள், நாட்டின் உழைப்பாளி களைப் பற்றிய அரசின் பார்வையை வெளிப் படுத்துகின்றன. போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவது, தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைப் பலப்படுத்துவதன் மூலம் தகர்க்கப் பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், பெண்கள் வேலை இடத்திலும், வீட்டிலும் இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாவ தால், பெண் தொழிலாளர்களை விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றி, அவர்களின் கோரிக் கைகளை தொழிற்சங்கத்தின் பொதுக் கோரிக் கைகளாக மாற்றுவது இந்த இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நிரந்தரப் பணிகளின் அழிவு தென்மண்டல இன்சுரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு முன்னாள் பொதுச்செயலாளர் க. சுவாமி நாதன், கூட்டுறவுத் துறை என்பது கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு மாற்றாக முளைக்கக் கூடிய மனிதநேயமான பொருளாதார வடிவம் என்று புகழாரம் சூட்டினார். நிரந்தர வேலை களைத் தற்காலிகமாக மாற்றுவது, பணி பாது காப்பைச் சீரழிப்பது, ஒப்பந்த / அவுட்சோர்சிங் முறைகளைப் பெருக்குவது ஆகியவை நவீன தாராளமயப் பொருளா தாரப் பாதையின் விளைவுகளே. அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், இழந்த பணியிடங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் போன்ற கூட்டுறவுத் துறை ஊழியர் களின் கோரிக்கைகள், எல்லாத் துறை ஊழி யர்களின் பொதுக் கோரிக்கைகளாக இருப்ப தற்குக் காரணம் இந்த நவீன தாராளமயப் பாதையே என்றார். மேலும், பணவீக்கம் என்பது வெறும் பொருளாதார நிகழ்வு அல்ல; அது உழைப்பாளியின் வருமானத்தை மெல்லப் பறிக்கும் அரசியல் ஏற்பாடு என்றும் அவர் குற்றம் சாட்டினார். சங்கத்தின் போராட்டப் பாரம்பரியம் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேசுகையில், 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்ட் அமைப்பின் வீரஞ் செறிந்த போராட்டம்தான் இந்தச் சங்கத்தின் அடித்தளம் என்று பெருமிதம் கொண்டார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து அன்றைக்குப் போராட்டம் நடந்தது. 2016 ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே பெண்களும் இளைஞர்களும் இணைந்த போராட்டமே வெற்றியைப் பெற்றுள்ளது என்றார். ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, சிபிஎஸ் போன்ற திட்டங்களால் அருகில் ஒரு சத்துணவு ஊழியர் வெறும் ரூ.2,000 மட்டுமே பெறுவதையும், இன்னொருவர் ஓய்வூதியமே இல்லாமல் செல்வதையும் சுட்டிக்காட்டி, இந்த நிலை உருவானதற்கு அரசே முழு காரணம் என்று விமர்சித்தார். நிரந்தரப் பணியிடங்களை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும் என்று அவர் அறைகூவல்விடுத்தார். ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு. வெங்கடேசன் பேசுகையில், 2003 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஏற்பட்ட பின்ன டைவே சிபிஎஸ் (CPS) திட்டம் கொண்டு வரப்பட்டதற்குக் காரணம் என்றார். பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கு மறுக்க முடியாத உரிமை என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு ஊழி யர்கள் போராடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தச் செய்துள்ள னர். எனவே, ஓய்வூதியம் சாத்தியமில்லை என்ற அரசின் வாதம் பொய்யானது என்பது உறுதி யாகிறது. தமிழ்நாட்டிலும் நாம் ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுத்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க முடியும். நமது இறுதியான போராட்டம் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமாக அமையும் என்றும், பொங்க லுக்கு முன் பழைய பென்சன் திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதற்காக இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மாநாட்டில் வலியுறுத்தினார்.