தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“La Grazia” “கருணைக்கொலையும் தார்மீக நெறியும்” - கி.ஜெயபாலன்,

23 May 2026, 10:49 pm
“La Grazia” “கருணைக்கொலையும் தார்மீக நெறியும்” - கி.ஜெயபாலன்,

“La Grazia” “கருணைக்கொலையும் தார்மீக நெறியும்” - கி.ஜெயபாலன்,

உயிரோடு வதைக்கும் வேதனையிலிருந்து(Agony), மரணமே விடுதலை செய்கிறது என்ற கருத்தோட்டத்தில் உருவானதே கருணைக்கொலைச் சட்டம் (Euthanasia).

இதன் உருவாக்கத்தின் பின்னுள்ள தார்மீக நெறி பற்றிய தெளிவின்மையை (Moral Ambiguity) அலசும் இத்தாலியப் படமே,”La Grazia”

. மரியானோ டி சாண்டிஸ் என்பவர் இத்தாலியின் அதிபர். இவரது பதவிக் காலம் முடிவடைய ஆறு மாதங்களே உள்ளது.

கத்தோலிக்க மதப் பற்றாளரான இவர் ஒரு சட்ட நிபுணரும்கூட.காதல் மனைவி ஆரோ ராவின் இறப்பால் பல வருட தனிமையில் வாடுபவர்.

கனடாவில் தனியே வாழும் மகன் ரிக்கார்டோ,பாப் இசை பாடலாசிரியர். திருமணமாகாத மகள் டொரோடி ஜனா திபதி மாளிகையில் சட்டப் பிரிவில் தந்தைக்கு உதவி யாக உள்ளார். அதிபரின் இறந்த காதல் மனைவி ஆரோரா, தனக்கு முன் யாரோ ஒருவரை காதலித்ததாகவும், அதனை தன்னிடம் கடைசி வரை சொல்லாமல் துரோகம் செய்த தாகவும்,அதிபர் தினந்தோறும் எண்ணி வருந்துகிறார்.த

னது பால்ய நண்பனும்,நீதித்துறை அமைச்சருமான உஹோவே, அந்தப் பழைய காதலனாக இருக்குமோ? என்ற சந்தேகமும் அதிபருக்கு உள்ளது.

இதனால் உஹோவை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துகிறார். அதிபரின் பள்ளித் தோழியான கோகோ வளரிக்கு, ஆரோராவின் பழையக் காதலனைத் தெரியும். ஆனால் அவளும், இதுகுறித்து அதிபரிடம் எதுவும் சொல்லாமல் ரகசியம் காக்கிறாள். இருப்பினும் அன்பு மனைவியை முதலில் சந்தித்த இடத்திற்கு அடிக்கடி சென்று,அவள் மீதான காதலை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார் அதிபர். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து கருணைக் கொலை தொடர்பான சட்ட முன்மொழிவு அதிபரின் ஒப்புதலுக்காக வருகிறது.

கூடவே, கருனைக் கொலை செய்தவர்களான ரோக்கா என்பவளிடமி ருந்தும், ஆர்பா என்பவனுக்காகவும் ஜனாதிபதியிடம் மன்னிப்பு வேண்டி மனுக்கள் வந்துள்ளன.

நீதித்துறை அமைச்சர் உஹோவின் உறவினரே, மன் னிப்புக் கடிதம் கோரியுள்ள ரோக்கா.

இவளின் பொது மன்னிப்பு மனுவிற்கு ஆதரவாக ஜனாதிபதியின் மகள் மூலம் பரிந்துரையும் செய்துள்ளார் உஹோ.

ஆனால் மகளோ, மேற்கண்ட கருணைக்கொலைச் சட்டம் மற்றும் அதிபரின் பொதுமன்னிப்பு மனுக்களின் மீது விரைந்து முடிவெடுக்க மட்டும் தந்தையை வலியுறுத்துகிறாள். மன்னிப்புக் கேட்டு வந்த கோப்புகளை பார்வையிடு வதைக் காட்டிலும், உண்மையை நெருங்கி நின்று காண, இரு கைதிகளையும் நேரில் சென்று விசாரிக்க அதிபர் முடிவெடுக்கிறார். அதன்படி மகள் டொரோடி,கைதி ரோக்காவைச் சந்திக்கிறாள்.

தன்னை விட, கணவரைத் தான் அதிகமாக நேசித்ததாகக் கூறுகிறாள் ரோக்கா.

கணவனுக்கு மனச் சிதைவு நோய்.ரோக்காவின் தலைமுடியை எரித்தும், இருட்டறையில் பூட்டியும் சித்ரவதை செய்ததாகக் கூறுகி றாள். மேலும் தனக்காகக் காத்திருக்கும் வேறொரு வரை விரும்புவதாகக் கூறுகிறாள்

. நோயின் வதையிலி ருந்து, தன் கணவரை விடுதலை செய்வதற்காக கருணைக் கொலை செய்ததாகக் கூறி, ரோக்கா மன்னிப் புக் கேட்கிறாள்.

அதற்கு அதிபரின் மகளோ, மன்னிப்பு அனுதாபத்தால் கிடைக்காது. சட்டப் பாதுகாப்பும் வேண்டும் எனக்கூறி வெளியேறுகிறார் டொரோடி. இதேபோல் அதிபரும்,சிறைக்குச் சென்று ஆர்பா விடம் விசாரிக்கிறார். இவனோ,நகரமே கொண்டாடும் சிறந்த வரலாற்று ஆசிரியர். முதலில், தனக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பிருப்பதாக கோப்பில் குறிப்பிட்டி ருப்பதை மறுக்கிறான்.

அல்ஸைமர் நோய் கண்ட மனைவி அடையும் துன்பத்தைக் காணப் பொறுக்க வில்லை.

எனவே அவள்மீது கொண்ட அன்பு காரண மாகக் கொன்றதாகக் கூறுகிறான். த

னக்கு மன்னிப்பு வேண்டாமென்றும், தான் நடந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமைதியாக இறக்கவே விரும்புவதாகக் கூறுகிறான்.

தன்னளவில் மன்னிப்புக் கேட்காத ஆசிரி யர் ஆர்பாவுக்கு, மாணவர்கள் மன்னிப்புக் கேட்பது பெரிய முரணாகத் தெரிவதாகவும், இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறி அதிபரும் நகர்கிறார். இப்போது அதிபர் தனது நண்பரும், கருணைக் கொலைச் சட்ட எதிர்ப்பாளருமான போப்பிடம், தன்னு டைய தனிப்பட்ட மனப் பிரச்சனைகளையும், மூன்று கோப்புகளில் முடிவெடுப்பது குறித்த தனது குழப்பத் தையும் முறையிடுகிறார். போப்போ, கிருத்துவக் கோட் பாட்டின்படியான “Grace”தான் இதற்கான தீர்வு என ஒரே வார்த்தையில் கூறுகிறார். இப்போது,கருணைக்கொலைச் சட்டம் உள்ளிட்ட மூன்று கோப்புகளிலும், அதிபர் என்ன முடிவெடுத் தார்?.. மனிதன் முழுமையாக நல்லவனும் அல்ல; கெட்ட வனும் அல்ல.

இரண்டிற்கும் நடுவே குழப்பமாக வாழ் கிறான். காதலிக்கிறான்; துரோகம் செய்கிறான்; மன்னிக்கிறான்;சில நேரங் களில் அழிக்கத் துணிகிறான்.ஆனால் கடைசியில், அழிக் காமல் நின்று விடுகிறான்.அந்த ‘நிற்கும் தருணமே’, Grace என கவித்துவமாக படம் வரையறுக்கிறது. நீண்ட உரையாடல்கள் நிறைந்த படமாதலால், ஆங்காங்கே பொறி பறக்கும் வசனங்கள்.

எடுத்துக் காட்டாக, அதிபர் தன் மகளிடம், “கருணைக் கொலை செய்யும் சட்டத்தை அமலாக்க, கையொப்பம் இட்டால், தானொரு கொலைகாரன் என்றும்,இல்லாவிட்டால் தன்னை துன்பத்தை தருபவர்(Torturer)என்றும் ஊர் தூற்றும்”எனக் கூறுகிறார். “

குற்றவியல் சட்டம் என்பது உண்மையை கண்டு பிடிப்பதற்கான ஏற்பாடல்ல. மாறாக உண்மையை அணுக முயலும் ஏற்பாடே”எனக் கூறுகிறார். அதிபர் ஆர்பாவிடம்,”அன்பால் உயிரைக் காக் கலாம்”எனக் கூறுகிறார்.

அதற்கு ஆர்பாவோ, “துன்பத் தை முடிவுக்கு கொண்டு வர அன்பால் உயிரை எடுக் கலாம்” எனக் கூறுகிறார்.

மேற்கண்ட உரையாடல்களின் வழியாக வரும் வசனங்கள் சிந்தனையை தூண்கின்றன. அரண்மனை மாளிகையின் உள்ளே சிவப்புக் கம்பளங்களின் மேல், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு இரவுகளில் நடந்து தனிமை யைக் கழிக்கிறார் அதிபர்.

பிரமாண்ட அறையில் தனியே வெற்று நாற்காலிகளுக்கிடையே அமர்ந்து புகைபிடிக் கிறார்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அதிபரின் மன வெறுமையை பார்வையாளருக்குக் கடத்துகின்றன.

அதனை மிக நுட்பமாக தூரக்காட்சியில் ஒளிப்பதிவு செய்துள்ளார் டாரியா டி அண்டோனியா. எலக்ட்ரானிக் ஸ்கிரிச் சப்தத்தை எழுப்பி, கதாபாத் திரத்தின் உள்ளார்ந்த குழப்பத்தை காட்டும் வித்தியா சமான பின்னணி இசை. ஜனாதிபதி, இரவு நேரத்தில் மனைவியை நினைத்து சிகரெட் புகையை ஒரே தம்மில் நீண்ட நேரம் இழுத்து, நிதானமாக வெளியேற்றும் காட்சியாகட்டும்; கனடா வுக்குச் சென்ற பிள்ளைகள் குறித்து போப்பிடம் தனிமையோடு புலம்பும் தருணமாகட்டும்; பல இடங் களில் இயல்பான,அதே நேரத்தில் ஆழமான நடிப் பை வெளிப்படுத்தியுள்ளார் டோனி சர்விலோ.

அதிபரின் மகளாக நடித்த அன்னா பெர்ஸிட்டி,பெண் கைதியிடம் விசாரிக்கையில், அவளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உடலை நெளித்து, சமாளிக்கின்ற சிறப் பான உடல் மொழியில் பிரமாதப்படுத்தியுள்ளார்.

தனது காதல் மனைவியின் பழைய காதலன் யாரென்ற சந்தேகம் தீராமல், இறுதி வரை குழப்ப மாகவே அதிபர் இருப்பார்.

இதனை அடையாளப்படுத் தவே, ஜீரோ புவிஈர்ப்பு விசையில், விண்வெளி வீரன் போல் அதிபர், அந்தரத்தில் நிற்கின்ற காட்சியை அமைத்துள்ளார் இயக்குநர் பாவ்லோ ஷோரண்டினோ.

இவர் இத்தாலியின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர்.

மற்றொருவரின் வேதனையைத் தீர்க்க,கொலை செய்யும் உரிமை மனிதனுக்குண்டா?என்ற கேள்வியை நம் மனதில் இப்படம் விட்டு செல்கிறது. தற்கால அரசியலை தீவிரமாகப் பேசும் இப்படம்,2025 வெனீஸ் திரைப்பட விழாவில் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளது.முபியில் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.