சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்றார் எல்.கே. சுதீஷ்!
14 Mar 2026, 2:57 pm
<p><strong>சிபிஎம் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்றார் எல்.கே. சுதீஷ்!</strong></p>
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக மாநிலப் பொருளாளர் எல்.கே. சுதீஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், எஸ். கண்ணன், கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
