தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய ரக வேட்டி - சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்த வேண்டும்! நெசவாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்!

6 Oct 2026, 1:38 am
புதிய ரக வேட்டி - சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்த வேண்டும்! நெசவாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்!

புதிய ரக வேட்டி - சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்த வேண்டும்! நெசவாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்!

சென்னை, அக். 5 -தமிழக அரசின் புதிய ரக வேட்டி - சேலை உற்பத்திக்கான கூலியை நெசவாளர்களுக்கு உயர்த்தி தருவதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நெசவை நம்பியிருக்கும் 15 ஆயிரம் பேர்!

தமிழக அரசின் இலவச வேட்டி - சேலை உற்பத்தி திட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் 29 கூட்டுறவு சங்கங்கள் மூலம்4000 பெடல் தறிகள் இயங்கி வருகின்றன. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தவெக அரசு இந்த ஆண்டு புதிய ரக சேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது.

புதிய ரக உற்பத்திக்கு கட்டுபடியாகாத கூலி

ஏற்கெனவே உற்பத்தி செய்த ஜனதா ரக சேலைகளுக்கு நிர்ண யிக்கப்பட்ட கூலி 103 ரூபாய் 80 காசுகள் என்ற நிலையில், தற்போது புதிய ரகத்திற்கு 114 ரூபாய் 80 காசுகளாக கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதிய ரகத்திற்கு ஒரு சேலை நெசவு செய்வதற்கு ரூ. 250- வரை செலவாகும் எனவும், ஒரு தொழிலாளி ஒருநாளைக்கு 2 சேலைகள் மட்டுமே நெசவு செய்ய வாய்ப்புள்ளது எனவும் நெசவாளர்கள் கூறுகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பெடல்தறித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் - அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வில்லை

புதிய ரக சேலைக்கு கூலி உயர்வு வழங்கிடக் கோரி பெடல் நெசவாளர்கள், கைத்தறித் துறை அமைச்சர் - அரசின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துமுறையிட்டும் எவ்விதப் பயனும் இல்லாததால் 50 நாட்களுக்கும் மேலாகதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இதுவரை வேடிக்கை பார்த்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ரூ. 10 ஆயிரம் வரை நிவாரணம் வழங்குக!

எனவே, பெடல் தறித் தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கைகளான புதிய ரக சேலை ஒன்றுக்கு ரூ. 250 கூலி வழங்க வேண்டும், புதிய ரக மாற்றத்திற்கு உபகரணங்கள் மற்றும் செலவினங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிட வேண்டும், வேலையில்லாக் காலத்திற்கு மாதம் ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், கொள்முதல் செய்யப்படாமல் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும், புதிய ரகத்தினால் பழையரகத்தில்பணி செய்த பசை போடுபவர்கள், நூல் சுற்றுபவர்கள், பாவோடிகளுக்கு மாற்று ரகம் வழங்கி பணிகள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கட்கிழமை (5.10.2026) முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராஜபாளையத்தில் காத்திருப்பு போராட்டம் துவங்கியுள்ளது.

அனைத்து பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்

நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக இயக்கங்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் போராடும் பெடல் தறி நெசவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திஅவர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்றிடவும், பொதுமக்க ளுக்கு எவ்வித தங்கு தடையுமின்றி இலவச வேட்டி - சேலை உரிய காலத்தில்வழங்கிடவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.