எல். இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்: ஓராண்டாகத் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் அவலம்
27 Jun 2026, 12:41 am

எல். இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்: ஓராண்டாகத் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் அவலம்

சிதம்பரம், ஜூன் 26- சமூக நீதி காவலர் எல். இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங் கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடப்பது பொதுமக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ளன.

நினைவரங்கத்தின் பின்னணி

பட்டியலின மக்களின் முன்னேற்றத் திற்காகப் பாடுபட்டவரும், அகில இந்தியத் தீண்டாமை ஒழிப்பு கமிட்டி யின் முதல் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் எல்.இளையபெருமாள். இவரது சேவையைப் போற்றும் வகையில், கடந்த திமுக ஆட்சியில் சிதம்பரம் புறவழிச்சாலையில் ரூ.5 கோடி மதிப்பில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்பட்டது. இந்த நினைவரங் கத்தை, கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கு

கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த நிலையில், நினைவரங்கத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற் கான நடவடிக்கைகளில் கடலூர் மாவட்டப் பொதுப்பணித்துறை (கட்டிடப் பிரிவு) அதிகாரிகள் மெத்தன மாகச் செயல்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகை யில், “இந்த நினைவரங்கத்தில் பொது மக்களின் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாகப் பெரிய அரங்கம் அமைக் கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரங் கத்தைப் பொதுமக்கள் தொடர்புத் துறையிடம் ஒப்படைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வருவதில் அதிகாரி கள் தேவையற்ற காலதாமதம் செய்து வருகின்றனர். மேலும், அரங்கத்திற் கான வாடகை நிர்ணயம் செய்வதில் காட்டி வரும் அலட்சியத்தால், கடந்த ஓராண்டாகக் கட்டடம் பூட்டியே உள்ளது. இதனால், அரசுக்கு வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

பிறந்தநாள் மரியாதை

இதற்கிடையில், வெள்ளியன்று (ஜூன் 26) எல். இளையபெருமாளின் 102-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, நினைவரங்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், காட்டு மன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பி னர் எல்.எம். ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் சிந்தனைச்செல்வன், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவர் கே.ஐ. மணி ரத்தினம் உள்ளிட்டோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். நினைவரங்கத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை அதி காரிகள் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அந்த அரங்கத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.