முந்தய பக்கம்

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பெண்கள் கபடி போட்டி துவக்கம்

12 Aug 2026, 9:54 pm
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பெண்கள் கபடி போட்டி துவக்கம்

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பெண்கள் கபடி போட்டி துவக்கம்

மார்த்தாண்டம், ஆக.12-குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பெண்கள் கபடி போட்டி துவங்கியது.

குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் 101 ஆவது வாவுபலி பொருட்காட்சி ஆக.17 ஆம் தேதி நிறைவடைகிறது. பொருட்காட்சி முக்கிய நிகழ்வான வாவுபலி புதனன்று நடைபெற்றது. பொருட்காட்சி திடலில் மாணவ-மாணவிகளை ஊக்குவிப்பதற்காக தினசரி மாலை கபடி போட்டி நடந்து வருகிறது. மாணவிகளுக்கான கபடி போட்டி செவ்வாயன்று துவங்கியது. சுங்கான்கடை ஐயப்பா கல்லூரி அணியும் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி அணியும் மோதின. இதில் ஐயப்பா கல்லூரி அணி வெற்றி பெற்றது.

ஏற்றக்கோடு தனியார் மேல்நிலைப் பள்ளி அணியும், திக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. லஷ்மிபுரம் கல்லூரி அணியும் கருங்கல் அல்போன்ஸ் கல்லூரி அணியும் மோதின. நாகர்கோவில் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி அணியும் ஜெரோம் கல்லூரி அணியும் மோதின. உதயா கல்லூரி அணியும் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணியும் மோதின. போட்டிகளை குழித்துறை நகராட்சி ஆணையாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram