திருநெல்வேலி விரைவு செய்திகள்
17 Aug 2026, 10:29 pm

கார் மோதித் தொழிலாளி உயிரிழப்பு

குழித்துறை, ஆக. 17களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீதுகார் மோதிய விபத்தில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த கல்லூரி விரிவுரையாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்டனர்.

களியக்காவிளை அருகேயுள்ள வயலங்கரை, இடைக்கவிளை வீட்டைச் சேர்ந்தவர் விமல் ரோஸ் (30), கட்டுமானத் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை கோழிவிளை பகுதியிலிருந்து திட்டங்கனாவிளைபகுதிக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் செல்லப்பன் மகன் சஜிகுமார் (47), குறிச்சிவிளையைச் சேர்ந்தவர் ஆவார்.

தையாலுமூடு பகுதியில் வந்தபோது, அவர் ஓட்டிவந்த கார் விமல் ரோஸின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த விமல் ரோஸை அப்பகுதியினர் மீட்டுக் குழித்துறை அரசுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர்ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்களன்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்துக் களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழித்துறை வாவுபலி பொருட்காட்சி நிறைவு

குழித்துறை, ஆக. 17குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் 101 ஆவது வாவுபலி பொருட்காட்சி கடந்த ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 திங்களன்று நிறைவடைந்தது.பொருட்காட்சித் திடலில் உள்ள டிராகன்ரயில் பக்கக் காட்சியில் ஒரு பெட்டி கீழே விழுந்ததால் 5 பேர் காயமடைந்தனர். இதனால் கடந்த சனிக்கிழமை மாலை முதல்பக்கக் காட்சிகள் நிறுத்தப்பட்டன. மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை முதல் 16 ஆம் தேதி மாலை வரை பொருட்காட்சியும் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்துஞாயிறு மாலை முதல் பொருட்காட்சி மீண்டும் இயங்கியது. எனினும், நகராட்சிசார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை; பொதுமக்கள் இலவசமாகச் சென்று வந்தனர்.மாவட்ட ஆட்சியர் பிரவீன் உத்தரவைத் தொடர்ந்து, திங்கள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நகராட்சிசார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொருட்காட்சித் திடலில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து நிறைவு விழா நிறுத்தப்பட்டது. எனினும், கபடி போட்டி,குத்துச்சண்டை போட்டி போன்றபல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களில் சிறந்தவைகளுக்கும் வரும் 22 ஆம் தேதிசனிக்கிழமை மாலை 3 மணி முதல் நகராட்சி அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்படும் என நகராட்சி சார்பிலஅறிவிக்கப்பட்டுள்ளது.