குழித்துறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் விஷ பாம்புகளின் கூடாரமாக மாறி உள்ளது மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை
18 May 2026, 10:52 pm
<p><strong>குழித்துறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் விஷ பாம்புகளின் கூடாரமாக மாறி உள்ளது மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை</strong></p><p>குழித்துறை , மே18 குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது . குழித்துறை பெருந்தெரு பகுதியில் இருந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த அரசின் நிதி ஒதுக்கீடில் குழித்துறை ஒதுங்கிணந்த நீதிமன்ற வளாகம் , சிறைச்சாலை மற்றும் தாலுகா அலுவலகம் பக்கம் நவீன வசதிகள் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் நாகர்கோவில் நடந்த விழாவில் திறக்கப்பட்டது. 24 மணி நேரம் செயல்படும் இந்த சுகாதார நிலையத்தின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. புதர்கள் நிறைந்து விஷ பாம்புகளின் கூடாரமாக மாறி உள்ளது. தினமும் விஷ பாம்புகள் இங்கு படை எடுத்து வருகின்றன. மேலும் அரிசி , மண்ணெண்ணெய் கடத்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு சுவர் கட்டப்படவில்லை.இதனால் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படு கின்றன. பொதுப்பணித்துறை சார்பில் தான் இங்கு பராமரிப்பு வேலைகள் செய்யப்படுகின்றன. தற்போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
