முந்தய பக்கம்

குழித்துறை : கட்டணக் கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

20 May 2026, 9:57 pm
குழித்துறை : கட்டணக் கழிவறை  மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

குழித்துறை : கட்டணக் கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

குழித்துறை, மே 20- குழித்துறையில் கட்டண கழிவறை மேற்கூரையிலிருந்து கான்கிரீட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.

குமரி மாவட்டம், குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பறை 8 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் குழித்துறை சந்திப்பு அருகே கப்பாலத்தடி வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது.

இதை ராஜமணி என்பவர் குத்தகைக்கு எடுத்து கட்டணம் வசூல் செய்து வருகிறார்.

குழித்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் கழிப்பறையின் உள்பகுதியில் மேற்கூரையின் அடிப்பகுதி சிமென்ட் கலவை பெயர்ந்து விழுந்தது. க

ழிவறையினுள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குழித்துறை நகராட்சி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மிகப் பழமையான இக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் குழித்துறை சந்திப்பு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நவீன கழிப்பறை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram