குழித்துறை நகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக! சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் கோரிக்கை
1 Oct 2026, 9:16 pm

குழித்துறை நகராட்சி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக! சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் கோரிக்கை

குழித்துறை,அக்.1-சிஐடியு தலைமையிலான கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர்சங்கத்தின் சார்பில் குழித்துறை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் சங்க அமைப்புக் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கதலைவர் எஸ். கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். சி.ஸ்டாலின் தாஸ், துணைத் தலைவர் பி. சசிகுமார், குழித்துறை நகர்மன்ற உறுப்பினர் சர்தார்ஷா, மோகன் குமார் ஆகியோர் பேசினர். தலைவராக சி.செந்தில் குமார், செயலாளராக டி. ரமேஷ் , துணைத்தலைவராக ஜெ. கீதாராணி, இணைச் செயலாளராக டி.கலா, பொருளாளராக எம். எஸ் ரம்யா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மாவட்ட ஆட்சியர் அறிவித்ததினக்கூலி ரூ. 770 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.