வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் ஆணையாளர் குழித்துறை நகராட்சிக் கூட்டத்தில் சேர்மன்- கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
21 May 2026, 10:42 pm

வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் தடுக்கும் ஆணையாளர் குழித்துறை நகராட்சிக் கூட்டத்தில் சேர்மன்- கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

குழித்துறை,மே 21- குழித்துறை நகராட்சிக் கூட்டம் சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் நடைபெற்றது.

ஆணையாளர் வெங்கடாசலபதி, ஆர்.ஐ. செந்தில்குமார், சுகாதார அதிகாரி ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

துணைத்தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: குழித்துறை விஎல்சி திருமண மண்டப வேலை ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கவுன்சிலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஆணையாளர், அதிகாரிகளுக்கு இதற்கான அனுமதி கேட்டு பைல் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

சிபிஎம் கவுன்சிலர் சர்தார் ஷா பேசுகையில், பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றார். இதற்காக சிறப்பு அனுமதி பெற ஊழியர் இன்று சென்னை சென்று உடனடியாக பணி தொடங்கப்படும் என்று ஆணையாளர் பதிலளித்தார். பொருட்காட்சி மதம் சார்ந்த நிகழ்ச்சியாகும்.

இதற்கு நாம் நிரந்தர அனுமதி பெற்றுள்ளோம் என்று சர்தார ஷா கூறினார்.

சேர்மன் குற்றச்சாட்டு வாவுபலி பொருட்காட்சியால் குழித்துறை நகராட்சிக்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. விஎல்சி திருமண மண்டபம் ஒரு நிலையாவது கான்கிரீட் போட வேண்டும். அப்பொழுதுதான் பொருட்காட்சி நடத்த முடியும்.

இதற்கு ஆணையாளர் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சேர்மன் பொன் ஆசைதம்பி குற்றம்சாட்டினார். நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்கு பொருத்துவதற்காக மின்வாரியத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்தப்பட்டது .பாக்கி செலுத்தவில்லை. அது எந்த நிலைமையில் உள்ளது என்ற கேள்விக்கு ஆணையாளர் பதிலளிக்கையில், மின்வாரியத்திலிருந்து திரும்ப வந்தது என்றார்.

இதற்கு உரிய நடவடிக்கையை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என்று கவுன்சிலர் சர்தார் ஷா வலியுறுத்தினார். தூத்தூர் ஜாக்குலின் என்ற பாட்டியின் கணவர் ஏழு வருடத்திற்கு முன் கடலில் சென்ற போது இறந்துவிட்டார்.

அவரது உடல் கிடைக்கவில்லை. இவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத்துறையும் கூறியுள்ளது. இதுவரை ஏன் கொடுக்கவில்லை என்று கவுன்சிலர் பிஜூ கேள்வி எழுப்பினார். இதற்கு ஆணையாளர் பதிலளிக்கையில், இரண்டு நாளில் வழக்கறிஞரிடம் கேட்டு கொடுத்து விடலாம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் பிஜு ,சாபு, அருள் ஆகியோர் ஆணையாளர் மேசை அருகில் சென்று காரசாரமாக விவாதித்தனர். நகராட்சிக்கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. ஆறு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு இறப்பு சான்றிதழ் கூட்டம் முடிந்ததும் உடனடியாக வழங்கப்பட்டது.