தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குழித்துறை ஜங்சன் பகுதியில் தேங்கும் மழை நீர் : ஆட்சியர் நேரில் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

27 Oct 2026, 8:54 pm
குழித்துறை ஜங்சன் பகுதியில் தேங்கும் மழை நீர் : ஆட்சியர் நேரில் ஆய்வு  ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

குழித்துறை ஜங்சன் பகுதியில் தேங்கும் மழை நீர் : ஆட்சியர் நேரில் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

குழித்துறை, அக்.27-குழித்துறை ஜங்ஷனில் தேங்கும் மழை நீர் பகுதியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

குமரி மாவட்டம், குழித்துறை ஜங்ஷனில் வடிகால் மெயின் ரோட்டை கடந்து கல்பாலத்தடி சானலில் கலந்து

வந்தது. ஆனால் இந்த வடிகால் ஆக்கிரமிப்பின் பிடியில்சிக்கி மிக குறுகியதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மிகப்பெரியதாக வடிகால் காணப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை நடுவில் வடிகால் பகுதியில் ஒரு பாதாள குழி ஏற்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மண் போட்டு பாதாளக்குழியை மூடினர். இதனால் வடிகால் தடைப்பட்டது. அதன் பிறகு மழைநீர் ரோடு வழியாக பாய்ந்து வந்தது .குழித்துறையில் பத்து நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மழைநீர் கழிவு நீருடன் கலந்து இந்தப் பகுதியில்உள்ள 25 க்கும் மேற்பட்ட வீடு மற்றும் காம்ப்ளக்ஸ்களில், கடைகளில் மழைநீர் மற்றும் கழிவு நீர் புகுந்துகொசுக்களின் தொல்லையும் அதிகரித்தது. இந்த பகுதி

யைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் தேங்கும் கழிவு நீரை மோட்டார் மூலம் ரோடுகளில் விடுகின்றனர். இதனால்ரோடும்சேதமடைகிறது. பாதாள குழியில் தேங்கும் மழை நீரை நகராட்சி கழிவுநீர் வாகனம் மூலம் தினசரி அகற்றப்பட்டுவருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட லாரியில் கழிவு நீர் எடுத்து மறுபுறம் வடிகாலில் விடப்பட்டது.இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதாப்காலை இந்த பகுதியை பார்வையிட்டார். குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி, ஆணையாளர் சக்திவேல்,சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், ஆர் ஐ செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பகுதியில் உள்ள புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உடனடியாக இரண்டு பெரியபைப்புகளை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே அமைத்துமறுபுறம் வடிகாலுடன் இணைக்க வேண்டும் .அதை உடனே செய்ய வேண்டும். அடுத்த மழை சீசன் ஆரம்பிப்பதற்கு முன் இந்த பணியை செய்ய வேண்டும்.இதற்கான திட்டத்தை எப்படி செய்ய வேண்டும் எனநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே தர வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.