ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்
9 Jul 2026, 9:33 pm
<p><strong>ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்</strong></p><p>குழித்துறை,ஜூலை 9- குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி க்கு உட்பட்ட குழித்துறை நீதிமன்ற சாலை (லஷ்மி தியேட்டர் அருகில்) பயணிகள் நிழலகம் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆபத்தான நிலையில் சரிந்து நிற்கிறது. தற்போது மழை பெய்து வருவ தால் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சி யளிக்கிறது .தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறிப்பாக பள்ளி குழந்தை கள் இங்கிருந்து அருமனை, நெட்டா, கற்றுவா போன்ற பகுதிகளில் செல்கின்ற னர். பெரும் விபத்து நிகழ்வதற்கு முன்பே குழித்துறை நகராட்சி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். </p>
