முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

12 Jun 2026, 9:06 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

ரூ.134.83 கோடி குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்

சென்னை, ஜூன் 12 - தமிழ்நாட்டில் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், ரூ.134.83 கோடி மதி ப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடியும், இதர மாவட்டங் களுக்கு ரூ.57.33 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு ஊக்கத்தொகை மற்றும் உயிர் உரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குறுவை, கார் மற்றும் சொர்ண வாரிப் பருவங்களில் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்கு வரக் கூடாது : அமைச்சர்

சென்னை, ஜூன் 12 - மதம், சாதி சம்பந்தப்பட்ட அடையா ளங்களோடு கல்வி வளாகங் களுக்கு யாரும் வரக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள் ளார். சென்னை கோட்டூர்புரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிய கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டு விட்டுத்தான் வருகிறேன். இங்கு ஒற்றுமையை வளர்க்கும் எதுவாக இருந்தாலும் வரலாம். பிரிவினையை வளர்க்கும் எதற்கும் இடமில்லை. சமூக நீதிக்கு மட்டுமே இடம் இருக்கிறது” என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் முதற்கட்டமாக ஐந்தாயிரம் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பைத்தான் உள்ளிட்ட கோடிங் பயிற்சி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram