தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவிரி நீரின்றி கருகும் குறுவை நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

16 Jul 2026, 9:53 pm
காவிரி நீரின்றி கருகும் குறுவை நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
<p><strong>காவிரி நீரின்றி கருகும் குறுவை நெற்பயிர்கள்: வி</strong>வ<strong>சாயிகள் கவலை</strong></p><p>மயிலாடுதுறை, ஜூலை 16 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர், கிள்ளியூர், பகுதிகளில் குறுவை நெற்பயிர்களில் இலை கருகல் நோய் ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 8,000 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இல்லாததால் கடந்த ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்து வந்த பெரும்பான்மையான விவசாயிகள் குறுவை நடவு பணியை கைவிட்டுள்ள நிலையில் கண்ணங்குடி, கிள்ளியூர், மாத்தூர், அன்னப்பன்பேட்டை, ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மோட்டார் பம்பு செட் நீரை கொண்டு எப்போதும் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்வது வழக்கம். அதே போல் நடப்பாண்டு விவசாயிகள் ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு விதை விட்டு நடவு செய்த பயிர்கள் தற்போது தண்டு உருளும் அளவிற்கு வளர்ந்துள்ளது. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்களில் அதிக அளவில் நோய் தாக்குதலும் இலை கருகல் நோய் தாக்குதலும் அதிகரித்து பயிர்கள் செழுமை இன்றி காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக திருக்கடையூர், கிள்ளியூர், கண்ணங்குடி, மாத்தூர், முக்கரும்பூர், கூடலூர், கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், “பம்பு செட்டு நீரை கொண்டு எப்போதும் முன்பட்ட குறுவை சாகுபடி செய்து விடுவோம்; அதேபோல் இந்த ஆண்டு மே மாதத்தில் நடவு செய்த பயிர்கள் நன்றாக பச்சை பிடிக்காமலும் இலை நுனியில் மஞ்சள் நிறமாக மாறி படிப்படியாக பயிர் முழுவதும் மஞ்சளாக மாறுகிறது. அதோடு பயிரின் வளர்ச்சி குன்றி கருகி போய் காணப்படுகிறது. திருக்கடையூர் அருகே கிள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணங்குடி, மாத்தூர், காடுவெட்டி, ராவணையன் கோட்டகம், சீவக சிந்தாமணி, சரபோஜிராஜபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நடவு செய்த பயிர்கள் பச்சை பிடிக்காமல் காய்ந்து சருகாக மாறி உள்ளது. பம்பு செட் மோட்டார் மூலம் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுவதால் நிலத்தடி நீர் உப்புத் தன்மையாக அதிகரித்து இது போன்று பயிர்கள் மாறி இருக்கும். மேலும் நடப்பு ஆண்டு கோடை மழை பெய்யாமல் அதிக அளவில் வெப்பம் இருப்பதால் பயிர்களில் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படுவதால் இதற்கான மருந்து வாங்கி தெளிப்பது கூடுதல் செலவாகிறது. வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுறுத்துவதால் தான் இயந்திர நடவு செய்தோம். ஆனால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட கூட வருவதில்லை. எனவே உடனடியாக அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து ஆய்வு செய்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.