கேள்விக்குறியாய் குறுவை சாகுபடி!
7 Jun 2026, 10:22 pm

கேள்விக்குறியாய் குறுவை சாகுபடி!

காவிரி டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை பாசனத்திற் காகத் திறக்கப்பட வேண்டும். இந்தாண்டு மேட்டூர் அணை யின் நீர் இருப்பு மிகக் குறைவாக உள்ளதால் ஜூன் 12-ல் அணை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மேட்டூர் அணை யில் 112 அடி (82 டி.எம்.சி) நீர் இருப்பு இருந்தது. இந்தாண்டு 79 அடியாக (41.49 டி.எம்.சி.) தான் நீர் இருப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குக் குறைந்தபட்சம் 300 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். தென்மேற்குப் பருவமழை வழக்கமாக மே மாதம் மூன்றாவது அல்லது இறுதி வாரத்தில் துவங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை இதுவரை போதிய அளவு துவங்காத நிலையுள்ளது. வானிலை ஆய்வாளர்களின் ஆய்வுகளில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கமாகப் பெய்யக்கூடிய அளவில் இருக்காது என்றும், வெயிலின் தாக்கம் செப்ட ம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக “சூப்பர் எல் நினோ” பாதிப்பில் தென்மேற்குப் பருவமழை துவங்குவதிலும், தேவையான அளவு பெய்வதிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள் ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்தால்தான் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் போதிய அளவு நீர் தேங்கித் தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறக்கப்படும் நிலை உள்ளது.

தற்போதுள்ள நிலையில் மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு கீழ்க்கண்ட அடிப்படையில்தான் உள்ளது.

அணைகள் மொத்த நீர்மட்டம் தற்போதுள்ள நீர்மட்டம் மேட்டூர் 120 அடி 79.60 அடி கிருஷ்ணராஜ சாகர் 123.8 அடி 81.31 அடி கபினி 65 அடி 32.94 அடி ஹேரங்கி 129 அடி 93.35 அடி ஹேமாவதி 117 அடி 86.17 அடி நீர் பங்கீடு காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய சட்டரீதியான தண்ணீரைப் பெறக் கடந்த காலங்களில் நீண்ட நெடிய போராட்டங்கள் மூலமாகத்தான் பெற்று வருகிறோம்.

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை நூற்றாண்டைக் கடந்த பிரச்சனையாக நீடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு நடுவர் மன்றம் முதலில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் ஆண்டிற்கு 205 டி.எம்.சி, பிறகு நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் 192 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இது மேலும் குறைக்கப்பட்டு ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் துவங்கி மே மாத இறுதி வரை மாத வாரியாக நீர் பங்கீட்டைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு மாத வாரியாக முறையாக வழங்குவதில்லை.

அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது கர்நாடக மாநில அணைகள் முழுவதுமாக நிரம்பிய பிறகு உபரித் தண்ணீரைத் திறந்துவிடுவதைக் கர்நாடக அரசு வழக்கமாக மேற்கொண்டு வருகிறது. குறுவை சாகுபடி நடக்குமா? காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டு உச்சபட்சமாக 6 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடை பெற்ற நிலையில், நடப்பாண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டால்தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் இருப்பும், காவிரி ஆற்றில் நீர்வரத்து சுமார் 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் தொடர்ந்து வரத்து வந்தால்தான் பாசனத்திற்காக அணை திறப்பது சாத்தியமாகும். ஆனால் தற்போது அணையில் நீர்மட்டம் 79.26 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு நீர்வரத்து ஞாயிறன்று 2369 கனஅடியாக உள்ள நிலையில், நீர் திறப்பு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப் பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. ஒருவேளை, திடீரென்று தென்மேற்குப் பருவமழை குறிப்பிட்ட சில நாட்களில் மிகக் கூடுதலாகப் பெய்து காவிரி ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் வந்தால், ஜூன் மாத இறுதிக்குள் மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கும் நிலை ஏற்பட்டால், குறுவை சாகுபடியை ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்ள முடியும். அரசு மேற்கொள்ள வேண்டியது இத்தகைய சூழலில்,

• நீர்ப்பற்றாக்குறை காலங்களில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை எப்படிப் பங்கீட்டுக் கொள்ள வேண்டுமென்று உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பில் வழிகாட்டப்பட்டுள்ள அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைப் பெற மாநில அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

• போதிய தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஆழ்குழாய் பாசனம் மூலம் நடைபெறும் குறுவை சாகு படிக்கு மும்முனை மின்சாரம் தடையில்லாமல் குறைந்த பட்சம் 12 மணி நேரம் அரசு வழங்கிட வேண்டும்.

• தரமான குறுகிய கால விதைகள் மானிய விலையில் வேளாண்மைத்துறை மூலம் வழங்கிட வேண்டும். • டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டால், ஒரு போக சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பதற்கான காலம், மற்றும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒரு போக சாகுபடிக்கான தொகுப்புத் திட்டங்கள் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.