தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளூரில் குறவர் இன மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு

15 Jun 2026, 12:52 am
பள்ளூரில் குறவர் இன மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு
<p><strong>பள்ளூரில் குறவர் இன மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு</strong></p><p>ராணிபேட்டை, ஜூன் 14- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் பள்ளூரில், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற குறவரின மாணவ-மாணவிகளுக்கும், எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.கே.தணிகாசலம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, அவர்களின் எதிர்காலக் கல்வி சிறக்க வாழ்த்திப் பேசினார். இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் இரா.வெங்கடேசன் மற்றும் ஓவியர் சாம்பசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும், சங்கத்தின் மாநிலத் துணை நிர்வாகிகள் ஜெயந்தி, ரமேஷ்பாபு, த.சிவா, வி.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர். இப் பாராட்டு விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் உற்சாகமாக பங்கேற்று பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.