தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

10 Jan 2026, 2:48 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் ‘குறள் வார’ விழா! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் ‘குறள்  வார விழா’ கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய திருவள்ளு வர் சிலையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்த தற்கு இணங்க ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார  விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக கூறியுள்ளார். 38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல்,  இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி  வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இவற்றைத்  ‘திருக்குறள் திருவிழா; தமிழர்களுக்குத் தெவிட்டாத பெரு விழா’ என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்ததாகவும், ‘வள்ளுவம் போற்றுதும்’ என்றும் முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு: குழு அமைக்க வலியுறுத்தல்

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி  கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பை திறம்பட மேற்கொள்ள ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிர திநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடி தத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு 11.9 சதவீத பொருளாதார  வளர்ச்சி அடைந்துள்ளது: அமைச்சர்

சென்னை: பெண் கல்விக்கு முதலமைச்சர் தரும் முக்கியத் துவத்தால் தமிழ்நாடு 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டு பெண்கள் உற்பத்தித் துறையில் அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறார்கள் என்றும், ‘ஆண்களுக்கு பெண்கள் சமம்’ என்ற கொள்கையில் திட்டங்கள் கொண்டு வந்ததால் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநில மாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் தணிக்கை வாரியமும் சேர்ந்துவிட்டது!

சென்னை: பாஜக கூட்டணியில், திரைப்படத் தணிக்கை வாரியமும் புதிதாக இணைந்துவிட்டது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் ஏற்கனவே அமலாக்கத்துறை, வருமான  வரித்துறை, சிபிஐ ஆகியவை கூட்டணி வைத்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், தணிக்கை வாரியம் உள்ளிட்டவற்றை கூட்ட ணியில் வைத்துக் கொண்டுதான் பாஜக தேர்தலை சந்திக்க  உள்ளது என்று கூறினார். அதிகாரிகள் குழுக்களுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பாஜகவை எதிர்கொள்ள திமுக கூட்டணி தயாராக உள்ளது என்றார் அமைச்சர் ரகுபதி.

பொங்கல் பரிசு ரூ.3,348 கோடி விநியோகம்

சென்னை: தைப் பொங்கலை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2.22  கோடி எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்  வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு  நீளக் கரும்பு வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்து உள்ளார். மேலும் ரொக்கப் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படு கிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப  அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4 முதல் 7 வரை தொடர் புடைய நியாயவிலைக் கடைப் பணியாளர்களால் வழங்கப் பட்டது. இந்நிலையில், இதுவரை ரூ.3 லட்சத்து 349 கோடி  பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.