தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்துப் பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வலியுறுத்தல்

14 Feb 2026, 4:33 pm
அனைத்துப் பள்ளிகளிலும்  திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வலியுறுத்தல்
<p><strong>அனைத்துப் பள்ளிகளிலும் &nbsp;திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வலியுறுத்தல்</strong></p> <p>இராஜபாளையம், பிப்.14- தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி களிலும் திருக்குறள் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் பகுதியில் நடைபெற்ற திருவள்ளு வர் மன்றத்தின் 60 ஆவது ஆண்டு விழா வில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மூத்த கவிஞர் புலவர் அ.முத்த ரசு தலைமையில் நடைபெற்ற விழாவில் தலைவர் அருணாச்சலம் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அடிகளார், தென் &nbsp;மாவட்டங்களில் சாதி மோதல்கள் தீவிர மடைந்த காலத்தில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தமக்கு நல்லிணக்கப் பணி யை ஒப்படைத்ததாகவும், அதன் மூலம் &nbsp;நல்லிணக்க பேரணிகள் நடத்தப்பட்டதாக வும் நினைவுகூர்ந்தார். அந்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும் கூறினார். மேலும், சமூக அமைதிக்காக தெருக் &nbsp;களில் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்ட தும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதும் முக்கிய &nbsp;முன்னேற்றமாக அமைந்ததாக அவர் தெரி வித்தார். இன்றைய இளைய தலைமுறை தக வல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் திசை &nbsp;மாறி வருவதாகக் கூறிய அவர், &ldquo;முதலில் &nbsp;நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும்; அதற்கான அடிப்படை கல்வி. மனித நேயத்தை வளர்க்கும் சிறந்த நூல் திருக் குறள் தான்&rdquo; என்றார். அறத்துப்பால், பொருட்பால் உள்ளிட்ட திருக்குறளின் பகுதிகள் பள்ளிகளில் கட்டா யமாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும், இல்லற வாழ்க்கை முதல் உலக வாழ்வு வரை அனைத்திற்கும் வழிகாட்டும் நூல் &nbsp;திருக்குறள் என்றும் அவர் வலியுறுத்தி னார். விழாவில் திருக்குறளை மையமாகக் &nbsp;கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. &nbsp;சந்திரசேகரன் நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.