குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்பு மருத்துவ முகாம்</strong></p>
<p>சிவகங்கை, பிப்.8- தவத்திரு குன்றக்குடி அடி களார் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு சிவகங்கை மாவட்டம் கல் லல் வட்டாரத்திற்கு உட்பட்ட குன் றக்குடி தருமைக் கயிலைக் குரு மணி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மற்றும் மருத்துவம்-மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில், தவத்திரு பொன் னம்பல அடிகளார் மற்றும் காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி முன்னிலையில் தொட ங்கி வைத்து பார்வையிட்டனர். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், இதய, எலும்பி யல், நரம்பியல், தோல், மகப்பேறு- மகளிர், கண், காது-மூக்கு-தொண்டை, பல், மனநலம், நீரிழிவு, நுரையீரல், இயன்முறை, சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்து வம் என 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட் டன. மேலும் முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள், மாற்றுத்திறனாளி களுக்கான சான்றிதழ்கள் உள் ளிட்ட இணைச் சேவைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல் வர் ஜடாமுனி, இணை இயக்கு நர் ஜெயகீதா, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி உள்ளிட்ட மருத்துவர்கள், அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
