குந்தவை நாச்சியார் கல்லூரி பருவத்தேர்வு முடிவு வெளியீடு
2 Dec 2025, 4:11 pm
<p><strong>குந்தவை நாச்சியார் கல்லூரி பருவத்தேர்வு முடிவு வெளியீடு </strong></p>
<p>தஞ்சாவூர், டிச.2- தஞ்சாவூர் மாவட்டம் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2025-2026 ஆம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவத் தேர்வு (நவம்பர்- 2025) முடிவுகளை, தேர்வு நெறியாளர் முனைவர் தெ.மலர்விழி, வழங்கியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை கல்லூரி முதல்வர் முனைவர். து. ரோஸி, துறைத் தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதன் விவரம் www.kngac.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் 01.12.2025 திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. மறு கூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 05.12.2025 மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2025 ஆகும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் கல்லூரியின் தேர்வு நெறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
</p>
