முந்தய பக்கம்

கும்மனூரில் ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்

13 May 2026, 11:38 pm
கும்மனூரில் ஆட்டோ சங்க  புதிய கிளை துவக்கம்
<p><strong>கும்மனூரில் ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்</strong></p><p> திருவள்ளூர், மே 13- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த கும்மனூரில் ஆட்டோ சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நிகழ்ச்சி திங்களன்று (மே 11), நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் குமார் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் அபிஷேக், சரத்பாபு, சாண்டல்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் கொடியை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.நடேசன் ஏற்றி வைத்தார். தகவல் பலகையை கிராமத்தின் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் சோழவரம் பகுதி செயலாளர் சா. வேலு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ஜி.தேவநேசம், என்.நந்திராமன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் உறுப்பினர் அட்டை வழங்கினர். 1</p>
Share
FacebookXWhatsAppTelegram