தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளிகளுக்கு இடையேயான புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சிகுமுளி அரசுப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

yesterday
பள்ளிகளுக்கு இடையேயான புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சிகுமுளி அரசுப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

பள்ளிகளுக்கு இடையேயான புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சிகுமுளி அரசுப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னை, ஆக.22-பள்ளிகளுக்கு இடையேயான 15-வது புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி சென்னையில் கோலாகலமாக நிறைவடைந்தது.

சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையின் விழிப்புணர்வுத் திட்டமான கேன்-ஸ்டாப் அமைப்பு, ரோட்டரி மாவட்டம் 3234 உடன் இணைந்து இம்மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தின. சேத்துப்பட்டு சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், சுமார் 76 பள்ளிகளைச் சேர்ந்த 960-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

புற்றுநோய் தடுப்பு முறைகள், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் குறித்து இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தகவல் அரங்குகள், ஓவியப் போட்டிகள், நாடகங்கள், வினாடி-வினா, பேச்சுப் போட்டிகள் மற்றும் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றியாளர்கள் விவரம்

அரசுப் பள்ளிகள் பிரிவில் குமுளி அரசு உயர்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது. தனியார் பள்ளிகள் பிரிவில் ஸ்பார்ட்டன் எக்ஸ்குளூசிவ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிக் சென்றது. வெற்றி பெற்ற இரண்டு பள்ளிகளுக்கும் தலா ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கிச் கவுரவிக்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ் ஜெயின், கேன்-ஸ்டாப் நிறுவனரும் சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலருமான டாக்டர் விஜயா பாரதி ரங்கராஜன் மற்றும் ரோட்டரி சங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.