தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பார்! வேளாண்மைத்துறை அமைச்சர் பேட்டி

16 Jun 2026, 11:05 pm
தமிழக முதல்வர் கும்பகோணத்தை  தனி மாவட்டமாக அறிவிப்பார்! வேளாண்மைத்துறை அமைச்சர் பேட்டி
<p><strong>தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பார்! வேளாண்மைத்துறை அமைச்சர் பேட்டி</strong></p><p>கும்பகோணம், ஜுன் 16- தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பார் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் கூறினார். கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “2028 மாசி மகாமக விழா தொடர்பாக, அற நிலையத் துறை அமைச்சரு டன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம். மகாமக திருவிழாவிற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பகோணத்தை தலை மையாகக் கொண்ட தனி மாவட்டம் அறி விப்பதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறோம். விரைவில் தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பார். நிறைவடையாத சுற்றுச்சாலை குறித்து ஏராளமானோர் என்னிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து, கடந்த ஆட்சி காலத்தில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என ஆய்வு மேற்கொள்ள கூறியுள்ளோம். மீதமுள்ள சுற்றுச்சாலை பகுதியையும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.