தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22ஆம் ஆண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி

16 Jul 2026, 9:46 pm
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22ஆம் ஆண்டு  மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22ஆம் ஆண்டு மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோ ணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் 2004ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்; 19 குழந்தைகள் காயமடைந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விபத்து நடந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 22ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழ னன்று (ஜூலை 16) அனுசரிக்கப் பட்டது. இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளின் புகைப் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி வளா கத்தில் வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய பேனர் முன்பும் மெழுகு வர்த்தி ஏற்றியும் மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். அதே போல தன்னார்வ அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில்குமார், சிஐ டியு மாவட்டச் செயலாளர் கண்ணன், ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபாலன், சண்முகம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜெய்துன் பீவி, வட்டாரச் செயலாளர் சுபாஷினி, மாதர் சங்க நகரச் செய லாளர் சுமதி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். 22 ஆண்டுகள் கடந்த போதிலும், பிஞ்சுக் குழந்தைகளை இழந்த வலி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் ஆறாத வடுவாகவே தொடர்கிறது.

நினைவுச் சுடர் ஏந்தி எஸ்எப்ஐ பேரணி கும்பகோணம் குழந்தைகளின் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய மாணவர் சங்கத்தினர், குழந்தைகள் நினைவு பூங்காவில் இருந்து, ஸ்ரீகிருஷ்ணா பள்ளி வரை நினைவுச் சுடர் ஏந்தி பேரணி சென்றனர்.

பின்னர், 94 குழந்தைகளின் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். கல்வி வியாபாரமயம் ஆக்கப்படு வதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், கும்பகோணம் குழந்தைகள் நினைவுநாளை, கல்வி நிலையங்கள் பாதுகாப்பு நாளாக தமிழக அரசு அறிவித்து, அனைத்து கல்வி நிலையங்களிலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிகழ்விற்கு கும்பகோணம் வட்டத் தலைவர் வசந்த் தலைமை வகித்தார். பேரணியை, மாநில துணைத் தலைவர் அமுல் காஸ்ட்ரோ துவங்கி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினர் சௌமியா நிறைவுரை யாற்றினார்.

மாநிலக் குழு உறுப்பி னர்கள் பா. விக்னேஷ், முகேஷ்ராஜன், தர்ஷினி, தஞ்சை மாவட்டச் செயலாளர் ஹரிஷ், மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் அபி னாஷ், திருவாரூர் மாவட்டச் செய லாளர் சுகதேவ், அரியலூர் மாவட்டச் செயலாளர் சரோஜினி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.