தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசிய அளவில் சாதனை படைத்த கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள்

14 May 2026, 10:01 pm
தேசிய அளவில் சாதனை படைத்த  கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள்

தேசிய அளவில் சாதனை படைத்த கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள்

கும்பகோணம், மே 14- கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் நடைபெற்ற தேசிய அளவிலான முதலாவது ட்ரிப் பால் நேஷனல் பெடரேஷன் கப் -2026 போட்டியில் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த மே 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை திருப்பதி கேவிஎஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசியப் போட்டியில், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.

அதில் கல்வியுடன் விளையாட்டிலும் சாதனை படைக்கும் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் U-17 மாணவிகள் பிரிவில், ரீமா, சுவேதா, மித்ரா, மனுஷா, ஹர்ஷிதா, சுகயாழினி, கிரிஷாந்தி ஆகியோரும், U-17 மாணவர்கள் பிரிவில் முகமது அர்சித், தருண் குமார், தர்சன், ரோஹித், பிரவீன் குமார், விஷ்வா, கிஷன் குமார், ராஜேஷ் கண்ணன் ஆகியோரும், தங்களின் சிறப்பான விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றனர்.

இவர்களது சாதனை பள்ளிக்கும் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர், கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.