முந்தய பக்கம்

கல்லூரி வளாகத்தில் சிற்றுண்டி நிலையம் அமைக்க கோரிக்கை

23 Jul 2026, 10:16 pm
கல்லூரி வளாகத்தில் சிற்றுண்டி  நிலையம் அமைக்க கோரிக்கை
<p><strong>கல்லூரி வளாகத்தில் சிற்றுண்டி நிலையம் அமைக்க கோரிக்கை</strong></p><p>கும்பகோணம், ஜூலை 23- கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில், அடிப்படை வசதிகளை சரி செய்திடவும், பேராசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும் கல்லூரி வளாகத்தில் சிற்றுண்டி நிலையம் அமைத்திட கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைத் தலைவர் ஜான் அபிஷேக் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி கல்லூரி கிளைச் செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், தர்ஷினி ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநகரத் தலைவர் பிரபாகரன் நன்றி தெரிவித்தார். விடுதிகிளை உறுப்பினர்கள், மாநகரக் குழு உறுப்பினர்கள், கல்லூரி கிளைக் குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram