கும்பகோணம் அரசுக் கல்லூரியின் மைதானம் கல்லூரி மாணவர்களுக்கே! இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>கும்பகோணம் அரசுக் கல்லூரியின் மைதானம் கல்லூரி மாணவர்களுக்கே! இந்திய மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்</strong></p>
<p>கும்பகோணம், பிப்.1 - கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி யின் பாரம்பரியமான விளையாட்டு மைதா னத்தில் பல்வேறு விளையாட்டு மாண வர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறை களில் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட பாரம்பரிய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில், தமிழக அரசின் விளையாட்டு துறையின் ஆணைக்கிணங்க சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதால் மூன்று துறை கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மாண வர்கள் கல்விப் பயலும் இடவசதியை இழக்க நேரிடுகிறது. எனவே விளையாட்டு அரங்கத்தை மாற்றம் செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பாக கல்லூரி வாயில் முன்பு தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகை யில், “கல்லூரி மைதானம் கல்லூரி மாணவர் களுக்கே” என்ற முழக்கத்துடன் கும்பகோ ணம் கல்லூரி இந்திய மாணவர் சங்கம் கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு கிளைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கல்லூரியின் கிளைச் செயலாளர் மகேஸ்வ ரன் விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலா ளர் ஹரிஷ் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.</p>
