தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

5 Jun 2026, 10:34 pm
குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜுன் 5- கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்திடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கும்பகோணம் ஒன்றியம் சார்பில், கும்பகோணம் காந்தி பார்க் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் குடிதாங்கி பாக்கியராஜ் தலைமை வகித்தார். ஒ

ன்றிய பொருளாளர் குண சேகரன் துணைச் செயலாளர் பாலமுருகன், ஜெயபால், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்கு மார் மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், ஒன்றியச் செயலாளர் ராஜா, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் உரையாற்றினர்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்திட வேண்டும். கூட்டுறவு பயிர் கடனை பாரபட்சமின்றி முழுவதும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கும்ப கோணம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குடிதாங்கியில் தடுப்பணை கட்டிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.