இலங்கையில் சர்வதேச அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டி கும்பகோணம் தடகள வீரர் ஜவஹர் முதலிடம்
25 May 2026, 10:20 pm
<p><strong>இலங்கையில் சர்வதேச அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டி கும்பகோணம் தடகள வீரர் ஜவஹர் முதலிடம் </strong></p><p>கும்பகோணம், மே 25- இலங்கையின் தலை நகர் கொழும்பு மாநகரில் உள்ள சுகதாச மைதா னத்தில் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த மாஸ்ட ர்ஸ் தடகள விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற 12ஆவது சர்வதேச (International) அளவிலான மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டி கள் மே 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் தடகள வீரர்கள் 35 வயது முதல் 80 வயதுக்கும் மேலான 600-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டு தல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். இந்தியா சார்பாக கள மிறங்கிய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி க்குட்பட்ட சோலையப்பன் தெருவைச் சேர்ந்த சாமி நாதன் மகன் ஜவஹர் (36) என்பவர் 35 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில், 100 மீட்டர், 200 மீட்டர் தனி நபர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டி களில் பங்கேற்று அனைத்தி லும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மேலும், அவரது பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டமும் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற இவரை உடற்பயிற்சி ஆசிரியர் எஸ்.வி.முரளி மற்றும் பலர் பாராட்டினர்.</p>
