முந்தய பக்கம்

மழையால் நீர்வரத்து தொடங்கியது : கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

18 May 2026, 10:57 pm
மழையால் நீர்வரத்து தொடங்கியது : கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
<p><strong>மழையால் நீர்வரத்து தொடங்கியது : கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி</strong></p><p>தேனி, மே 18- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி யில் கோடை மழையால் நீர்வரத்து தொடங்கியதால் ஒரு மாதத்துக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ. தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணா லயத்தில் அமைந்துள்ள இப்பகுதியை தேவதானப்பட்டி வனச்சரகம் பரா மரித்து வருகிறது . கொடைக்கானல், பாம்பார்புரம், வெள்ளக்கெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. தொடர்ந்து மழை யில்லாத நிலையில் அருவி வறண்ட தால் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து அருவிக்கு திங்களன்று நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்கலாம். பெரியவர்களுக்கு ரூ.30-ம் சிறுவர்களுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram