முந்தய பக்கம்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்

12 Jan 2026, 6:02 pm
குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்
<p><strong>குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்</strong></p> <p>கர்கோவில், ஜன.12- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் &nbsp; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் &nbsp;மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் &nbsp;ஜனவர் 12 திங்களன்று நடைபெற்றது. . &nbsp; கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உத வித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். &nbsp;இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், துறை அலுவலர்கள், பொது மக்கள் &nbsp;உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram