அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு
16 Mar 2026, 4:46 pm
<p><strong>அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் குமரி மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு</strong></p>
<p>நாகர்கோவில்.மார்ச். 16- நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்ற பொதுத்தேர் தல் நடத்தை விதிகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் அழகு மீனா கலந்தாய்வு நடத்தினார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாவட்ட தேர் தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந் ததை தொடர்ந்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந் தாய்வு மேற்கொண்டு தெரி விக்கையில்- இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொ துத் தேர்தல் அறிவிப்பு வெளி யிட்டதைத்தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் உட னடியாக நடைமுறை செய் யப்பட்டுள்ளது. தேர்தலில் பங்குபெறும் அனைத்து கட்சிகளையும் சமமாக கருதி, சமமான வாய்ப்பு அளித்திடும் நடை முறையை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உறுதி செய்கிறது. வெளிப் படையான முறையில் நடை முறைப் படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதிமுறை களால் இந்திய தேர்தல் முறைகளின் மீது வாக்கா ளர்களிடையே நம்பிக்கை யை மேம்படுத்திட உதவு கிறது. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படு வதை தடுக்கிறது. வாக்கா ளர்களை கவரும் விதமாக வாக்குக்கு லஞ்சம் அளிக் கப்படுவதையோ, அச்சுறுத் தப்படுவதையோ அல்லது அதுபோன்ற தேர்தல் குற்றங்களை தடுத்திட பேரூதவி புரிகின்றன. பொ துத்தேர்தல் சுமூகமாகவும், வெளிப்படைத்தன்மை யுடன் ஆரோக்கியமாகவும் நடத்திட உதவுகிறது. அரசு அலுவலகங்களில் 24 மணி நேரத்திலும், பொது இடங்களில் 48 மணிநேரத்தி லும் மற்றும் தனியார் இடங்களில் 72 மணி நேரத்தி லும் அரசியல் சார்ந்த பெயர் கள், சின்னங்கள், படங்கள், விளம்பரங்கள் ஆகிய வற்றை அகற்றப்பட்டு வரு கிறது. பறக்கும் படை (FST), நிலையான கண்கா ணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST) மற்றும் வீடியோ பார்வை யிடும் குழு (VVT) உள்ளிட்ட குழுக்கள் தங்களது பணிகளை துவக்கியுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவல கத்தில் புகார் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் தகவல் மையம் / ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றளிப்பு மையம் அமை க்கப்பட்டுள்ளது. அனை த்து பொதுக் கூட்டங்கள் / ஊர்வலங்கள் / வாகன அணிவகுப்பு /செய்தி, ஊட கம், சுவர் விளம்பரங்கள் செய்தல் ஆகியவற்றிற்கான அனுமதி அளிக்கும் ஒற்றை சாளரமுறை அமைப்பு ஏற் படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கட்ட மைப்புகள் குறித்து தெரி வித்தார்.</p>
<p> </p>
