தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவ மாணவியர்களிடம் காலை உணவு குறித்து குமரி ஆட்சியர் கலந்துரையாடல்

22 Dec 2025, 2:53 pm
மாணவ மாணவியர்களிடம் காலை உணவு குறித்து   குமரி ஆட்சியர் கலந்துரையாடல்
<p><strong>மாணவ மாணவியர்களிடம் காலை உணவு குறித்து &nbsp; குமரி ஆட்சியர் கலந்துரையாடல்</strong></p> <p>நாகர்கோவில். டிச. 22- குமரி மாவட்ட மாணவ, மாணவியரிடம் முதல மைச்சரின் காலை உணவு குறித்து ஆட்சியர் ஆர்.அழகுமீனா கலந்துரையாடினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட டி.வி.டி மற்றும் புனித ஜோசப் கான்வென்ட் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை &nbsp;உணவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மற்றும் மாணவர்கள் விருப்பத்துடன் உணவை உட்கொள்கி றார்களா உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு களை மிகவும் தரமானதாக தயாரிக்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு களில், மாணவர்களின் விருப்பமான உணவு எது என்ப தையும், தினமும் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவினை விரும்பத்துடன் சாப்பிடுகிறீர்களா எனவும் மாணவர்களிடம் கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில், தொடக்கப்பள்ளி தலை மையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவி யர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.