இட நெருக்கடியில் பேருந்து நிலையம்
30 May 2026, 11:54 pm
<p><strong>இட நெருக்கடியில் பேருந்து நிலையம்</strong></p><p>நாமக்கல், மே 30- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் புதிய பேருந்து நிலைய கட்டு மானப் பணிகள் ஓராண்டிற் கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையம் கடும் இட நெருக்கடியில் சிக்கி பய ணிகளும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக இயக் கப்பட்டு வருகின்றன. குறுகிய இடத்தில் பேருந்துகள் மட்டுமின்றி டாக்ஸிகள், டூரிஸ்ட் வேன்கள், சரக்கு வாகனங்கள், மினி பேருந்து கள் மற்றும் ஆட்டோக்களும் நிறுத்தப்படுவ தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள் ளது. மேலும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலை வாகனங்களும் தொடர்ந்து வந்து செல்வதால் நிலைமை மேலும் சிக்கலா கியுள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிக ளுக்கு போதிய இட வசதி இல்லாததால் அவர் கள் சிரமத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வாக னங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால் பேருந்துகள் உள்ளே வந்து திரும்பிச் செல்வதற்கே சிரமம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத் தில் கொண்டு புதிய பேருந்து நிலைய கட்டு மானப் பணிகளை விரைந்து முடித்து, விரை வில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.</p>
