கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்குமாரபாளையத்தில் 2 நாட்களாக வேலைநிறுத்தம்!
21 Aug 2026, 12:01 am

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்குமாரபாளையத்தில் 2 நாட்களாக வேலைநிறுத்தம்!

நாமக்கல், ஆக.20-கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீத கூலி உயர்வு, தொழிலாளர் சட்ட அமலாக்கம் குறித்து கடந்தாண்டு சிறப்பு பேரவைக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பள்ளிபாளையத்தில் 10% கூலி உயர்வு ஒப்பந்தமும், குமாரபாளையத்தில் 20% கூலி உயர்வு ஒப்பந்தமும் முடிவடைந்த நிலையிலும், திருச்செங்கோட்டில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை மூலம் கூலி உயர்வு வழங்கும் நடைமுறை இருந்தும், கடந்த 15 மாதங்களாக புதிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த மூன்று வருடத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 75% கூலி உயர்வு, இரவு ஷிப்ட் அலவன்ஸ், ஞாயிறு விடுமுறை, 8 மணி நேர வேலை, இஎஸ்ஐ, பிஎப், அடையாள அட்டை, ஓவர் டைமுக்குஇரட்டிப்பு சம்பளம், தேசிய பண்டிகை விடுமுறை மற்றும் விசைத்தறிக்கூடங்களில் குடிநீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர், ஆட்சியர் மற்றும் ஜவுளிஉற்பத்தியாளர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.

விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு மற்றும் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையீட்டு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகைளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டம் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் குமாரபாளையம் நகரத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.அசோகன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்டக்குழுஉறுப்பினர் சக்திவேல், நகரச் செயலாளர் கந்தசாமி,தொழிற்சங்க நிர்வாகிகள் கே.குமார், பாலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் உள்ள 36விசைத்தறிக்கூடங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.