தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் நிலத்தில் குப்பை கொட்டி எரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

26 Sept 2026, 1:02 am
தனியார் நிலத்தில் குப்பை கொட்டி எரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

தனியார் நிலத்தில் குப்பை கொட்டி எரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

நாமக்கல், செப்.25-குமாரபாளையம் அருகே, நகராட்சி குப்பைகள் தனியார் நிலத்தில் கொட்டி எரித்ததை கண்டித்து கிராம மக்கள் ஜேசிபி ஊழியர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நேரு நகர்ஜேகே கே அங்கப்பா நகர் பகுதி

யில் தனியார் நிலம் உள்ளது. இந்தநிலத்தில் குமாரபாளையம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நள்ளிரவு நேரங்களில் வாகனங்களில் மூலம் கொண்டு சென்று மலைபோல் கொட்டி வைத்துள்ளனர். இதனை பகல் நேரங்களில் தீ வைத்து எரிப்பதால் குப்பைகளில் இருந்து பரவும் நச்சுப்புகை அந்த பகுதியில் உள்ள நேரு நகர், அருவங்காடு, தட்டாங்குட்டை, கள்ளிப்பாளையம் மற்றும் வளையக்காரனூர், எதிர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் புகை பரவுவதால் அந்தப் பகுதிகளில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் தொற்று நோய் அதிகமாக பரவி வருவதாகக்கூறி வியாழனன்று அப்பகுதியில் திரண்ட கிராம மக்கள் அங்கு குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த தனியார் ஜேசிபி சிறை பிடித்தனர். மேலும் அங்கிருந்த நகராட்சிதூய்மைப்பணி ஊழியர்களையும் சிறை பிடித்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து குமாரபாளையம் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திஊழியர்களை மீட்டனர். பின்னர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த குப்பையை அனைப்பதற்கு குமாரபாளையம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து, தீயினை அணைத்தனர். அப்பொழுது பொதுமக்கள் இன்னும் இரண்டுநாட்களில் அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் அனைவரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.