குமாரபாளையம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்
5 Apr 2026, 5:18 pm
<p><strong>குமாரபாளையம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்</strong></p>
<p>நாமக்கல், ஏப்.5- குமாரபாளையம் சட்ட மன்றத் தொகுதி மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளராக எஸ். பாலு போட்டியிடுகிறார். இதனையொட்டி, திமுக செயல்வீர்கள் கூட்டம் பள்ளிபாளை யத்தில் தொகுதி பொறுப்பாளரான முன் னாள் ஒன்றிய இணையமைச்சர் காந்தி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராள மான நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றிக் கான ஆலோசனைகளை வழங்கினர். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் பிரகாஷ், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் பாலு கூறுகையில், குமாரபாளையம் தொகுதியில் தலையாய பிரச்சனை என்று பார்க்கப் போனால் சாயத் தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தான். அதனை உடனடியாக நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். நிச்சயம் எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெறு வீர்கள் என்று கழகத் தலைவர் முடிவு செய்த தால் என்னை வேட்பாளராக தமிழக முதல் வர் அறிவித்துள்ளார். குறைந்தது முப்பதா யிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். எதிர்க்கட்சி வேட்பாளர் தங்கமணி தோல்வி பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடிக்கொண்டு உள்ளார். நாங்கள் நிதானமாக மக்களை சந்தித்து வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்து வருகி றோம். வெற்றி பெறுவது நிச்சயம், என் றார்.</p>
