காவிரி கரையில் எரிக்கப்படும் குப்பை புகையால் பள்ளி மாணவர்கள் அவதி
5 Jul 2026, 1:28 am

காவிரி கரையில் எரிக்கப்படும் குப்பை புகையால் பள்ளி மாணவர்கள் அவதி

நாமக்கல், ஜூலை 4- குமாரபாளையம் காவிரி கரையில் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால் எழும் புகையால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவேரி ஆற்றங்கரை பகுதியில், நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், அதிகாலை நேரங்களிலேயே அந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், அப் பகுதி முழுவதும் மாலை வரை புகைமூட்ட மாக காணப்படுகிறது. இந்த புகையால் அரு கில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத்தி ணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் சுவாசிப் பதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர். நகராட்சி அலுவலகம் மிக அருகில் இருந்தபோதி லும், இப்பிரச்சனைக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர். எனவே, காவேரி ஆற்றங்கரை பகுதியில் குப்பைகள் கொட்டுவதையும், அவற்றை தீ வைத்து எரிப்பதையும் உடனடியாக தடுத்து, மாற்று இடத் தில் குப்பைகளை கொட்டுவதற்கான நடவ டிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளி மாண வர்களின் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி யும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.